ஆன்மிக களஞ்சியம்

வம்சாவளியை போற்றும் நவராத்திரி விழா

Published On 2023-06-10 04:59 GMT   |   Update On 2023-06-10 04:59 GMT
  • 9 நாட்களிலும் இரவு நேரத்தில் துர்கையை வழிபடுகின்றனர்.
  • விரதம் மேற்கொள்ளும் போது மனிதர்களின் தீய குணங்களை மனதில் இருந்து நீக்கி விட வேண்டும்.

பெண் கடவுள்களின் நவராத்திரி விரதம் பெண் தெய்வங்கள் 9 இரவுகள் கடுமையான விரதம் இருந்து அசுரர்களை வதம் செய்தனர். அனைத்து பெண் தெய்வங்களும் இணைந்து வதம் செய்வதற்காக உருவாக்கபட்டவரே பரலக்ஷ்மி. இந்த பரலக்ஷ்மியைதான் ராதா என்று அழைக்கிறார்கள்.

பரலக்ஷ்மி என்பதில் பரா என்றால் சுப்பீரிம் என்று பொருள்படும். ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மற்றும் அக்டோம்பர் மாதங்களில் நமது தேவியர்களின் வம்சாவளியை போற்றும் விதமாக நவராத்திரிவிழா கொண்டாடபட்டு வருகிறது. இந்த 9 நாட்களிலும் இரவு நேரத்தில் துர்கையை வழிபடுகின்றனர்.

இந்த வழிபாட்டில் அலைமகள், மலைமகள், கலைமகள் ஆகிய மூவரின் முன்னிலையில் தான் 9 நாட்களிலும் விரதம் மேற்கொள்கின்றனர். விரதம் மேற்கொள்ளும் போது மனிதர்களின் தீய குணங்களான வெறுப்பு, பொறாமை, அறியாமை, பேராசை, போன்ற அனைத்து குணங்களையும் மனதில் இருந்து நீக்கி விட வேண்டும்.

9ம் நாள் தான் அசுரர்களை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது தெய்வங்களின் ஜோதிட முறைப்படி ஆண்டு தோறும் நடைபெறுகின்றது. நவராத்திரி பூஜை மாங்கல்யம் ஆனவர்களால் கொண்டாடபடுகிறது. அதன் பின்பு நிலா வளம் வருகிறது.

Tags:    

Similar News