ஆன்மிக களஞ்சியம்

ஆடி செவ்வாய்-ஒளவை நோன்பு

Published On 2023-10-02 12:45 GMT   |   Update On 2023-10-02 12:45 GMT
  • இந்த ஒளவை வழிபாடு கன்னியாகுமரி மாவட்டத்தில் பல இடங்களில் உள்ளது.
  • இந்நாட்களில் பெண்கள் தவறாமல் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.

ஆடி மாதத்தில் வரும் செவ்வாய் கிழமைகள் சிறப்பு வாய்ந்தவையாகும்.

இந்நாட்களில் பெண்கள் தவறாமல் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.

ஆடிச் செவ்வாய் அவ்வையாருக்கு செய்யும் விரத பூஜையாகும்.

ஒளவை நோன்பு கடைப்பிடிப்பதால் கன்னிப் பெண்களுக்குத் திருமணமும் சுமங்கலிகளின் கணவர்களுக்கு நீண்ட ஆயுளும்,

குழந்தை வரமும் கிடைக்கும்.

பச்சரிசி மாவுடன் வெல்லம் கலந்து உப்பில்லாமல் செய்யும் கொழுக்கட்டைதான் நோன்பின் சிறப்பு பிரசாதமாகும்.

இதைப் பெண்கள் மட்டும் தான் செய்வார்கள்.

அன்று இரவு 10.00 மணியளவில் வீட்டில் உள்ள மூத்த வயதான பெண் தலைமையில் அத்தெருவில் உள்ள பெண்கள் அவர் வீட்டில் கூடுவார்கள்.

அதற்குமுன் ஆண்கள்- சிறு ஆண் பிள்ளைகள் உட்பட வெளியேற்றப்படுவார்கள்.

அவர்கள் பார்க்கவோ, கேட்கவோ, பிரசாதம் சாப்பிடவோ கூடாது.

பின் பூஜை நடைபெறும்.

ஒளவையார் கதையையும் அம்மன் கதையையும் வயதான பெண்மணி கூறுவார்.

சிறு பெண் குழந்தை முதல் பெரியவர்கள் வரையிலும் அனைவரும் கலந்து கொண்டு பூஜை முடிப்பார்கள்.

பின் கொழுக்கட்டைகளை மீதமின்றி சாப்பிட்டு முடித்து, வீட்டைத் தூய்மைப் படுத்திய பின்தான் காலையில் ஆண்கள் அங்கு வர வேண்டும்.

இதுதான் ஒளவை நோன்பு.

இந்த ஒளவை வழிபாடு கன்னியாகுமரி மாவட்டத்தில் பல இடங்களில் உள்ளது.

முப்பந்தல், தாழக்குடியருகே ஆதிச்ச நல்லூர், குறத்திமலை இங்கெல்லாம் ஒளவை ஆலயங்கள் உள்ளன.

அதியமானிடம் நெல்லிக்கனி பெற்ற ஒளவைதான் இவள்.

பாரியின் மகள்களான அங்கவை, சங்கவைக்குத் திருமணம் செய்வித்தவள்.

தகடூரில் உள்ள கோட்டை கல்யாண காமாட்சி ஆலயத்தில் உள்ள சூலினி துர்க்கை அம்மனின் முழு உருவத்தை,

ஆடி மாதம் மூன்றாம் செவ்வாயில் மட்டுமே மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 வரை தரிசிக்கலாம்.

மற்ற நாட்களில் முகதரிசனம் மட்டுமே.

Tags:    

Similar News