search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கோப்பு படம்: விண்டோஸ் 10
    X
    கோப்பு படம்: விண்டோஸ் 10

    மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் 10 எஸ் மோட் வெளியீட்டு தேதி அறிவிப்பு

    மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 10 எஸ் மோட் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    சான்ஃபிரான்சிஸ்கோ:

    விண்டோஸ் 10 எடிஷன் இயங்குதளத்திற்கான எஸ் மோட் வெளியீட்டு தேதியை மைக்ரோசாஃப்ட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அந்த வகையில் விண்டோஸ் 10 எடிஷன் எஸ் மோட் 2019-ம் ஆண்டு வாக்கில் வெளியிடப்பட இருக்கிறது. 

    மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் 10 எஸ் மோட் தற்போதைய இயங்குதளம் போன்றதாகும். எனினும் எஸ் மோட் இயங்குதளம் மைக்ரோசாஃப்ட் ஸ்டோர் செயலிகளை மட்டும் இயக்கும் படி இயங்குதளத்தை லாக் செய்யும் என தெரிவித்துள்ளது. புதிய இயங்குதளம் விண்டோஸ் 10 எஸ் போன்றே வேலை செய்யும்.

    விண்டோஸ் 10 ஹோம், என்டர்பிரைஸ் மற்றும் ப்ரோ வெர்ஷன்களில் எஸ் மோட் அப்டேட் வழங்க மைக்ரோசாஃப்ட் முடிவு செய்துள்ளது. விண்டோஸ் 10 எஸ் முன்னதாக சர்ஃபேஸ் லேப்டாப் சாதனத்திற்கு மட்டும் வழங்கப்பட்டு, பெரும்பாலான பயனர்கள் இதனை பயன்படுத்த துவங்கினர்.

    எஸ் மோட் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் எஸ் மோட்-ஐ விட்டு வெளியேற நினைத்தால் எவ்வித கட்டணமும் செலுத்தாமல் வெளியேற முடியும். எனினும் எஸ் மோட் எனேபிள் செய்திருக்கும் விண்டோஸ் 10 ப்ரோ வாடிக்கையாளர்கள் 49 டாலர்கள் செலுத்தி விண்டோஸ் 10 ப்ரோ முழு வெர்ஷனை வாங்க வேண்டும். 

    வரும் மாதங்களில் எஸ் மோட் கொண்ட விண்டோஸ் 10 சாதனங்கள் விற்பனைக்கு வரலாம் என மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது. விண்டோஸ் 10 ஹோம் அல்லது விண்டோஸ் 10 ப்ரோ பி.சி. இணைப்புகளை எஸ் மோட் எனேபிள் செய்யப்பட்டு புதிதாய் வாங்க முடியும். வணிக ரீதியிலான வாடிக்கையாளர்கள் விண்டோஸ் 10 என்டர்பிரைஸ் மாடலில் எஸ் மோட் எனேபிள் செய்ய வேண்டும்.
    Next Story
    ×