search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி குறித்து மத்திய அரசு முடிவு எடுக்கட்டும்- கபில்தேவ்
    X

    இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி குறித்து மத்திய அரசு முடிவு எடுக்கட்டும்- கபில்தேவ்

    புல்வாமா தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடுவது பற்றி மத்திய அரசு தான் முடிவு எடுக்க வேண்டும் என்று கபில்தேவ் கூறியுள்ளார். #KapilDev #pulwama #IndiavsPakistan

    புதுடெல்லி:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமா தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாட எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னாள் கேப்டன்கன் அசாருதீன், கங்குலி மற்றும் ஹர்பஜன்சிங் ஆகியோர் உலக கோப்பையில் பாகிஸ்தானுடன் ஆடக் கூடாது என்று கருத்து தெரிவித்து உள்ளனர்.

    முன்னாள் கேப்டன்கள் கவாஸ்கர், தெண்டுல்கர் ஆகியோர் உலக கோப்பையில் பாகிஸ்தானுடன் விளையாடி வீழ்த்த வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

    உலக கோப்பையில் பாகிஸ்தானுடன் விளையாடுவது பற்றி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. இது தொடர்பாக பி.சி.சி.ஐ. நிர்வாகிகள் இடையே மாறுபட்ட கருத்துகள் நிலவுகிறது.

    இந்த நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து மத்திய அரசு முடிவு எடுக்கட்டும் என்று முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார். தனியார் டெலிவி‌ஷனுக்கு அளித்த பேட்டியில் அவர் இது தொடர்பாக கூறியதாவது:-

    தற்போது நிலவும் சூழ் நிலையில் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட வேண்டுமா? அல்லது வேண்டாமா? என்பதை பற்றி நம்மை போன்ற மக்கள் முடிவு எடுக்க கூடாது. இது மத்திய அரசால் முடிவு எடுக்கப்பட வேண்டியது.

    இதனால் நமது தனிப்பட்ட கருத்துக்களை திணிக்காமல் இருப்பது நல்லது. எனவே இந்த முடிவை அரசு மற்றும் அது தொடர்புடையவர்கள் மட்டுமே எடுக்க வேண்டும்.

    இந்த முடிவு நாட்டின் நலன் கருதி எடுக்கும் முடிவாகத்தான் இருக்கும். எனவே அதன்படி நாம் செயல்படுவோம்.

    இவ்வாறு கபில்தேவ் கூறியுள்ளார்.

    அரசு அனுமதிக்கும் வரை இந்தியா- பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி நடைபெறாது என்று ஐ.பி.எல். தலைவர் ராஜீவ்சுக்லா தெரிவித்து இருந்தார்.

    உலக கோப்பையில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி ஜூன் 16-ந்தேதி நடக்கிறது.

    கபில்தேவ் தலைமையில் இந்திய அணி 1983-ல் முதல் முறையாக உலக கோப்பையை கைப்பற்றி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. #KapilDev #pulwama #IndiavsPakistan

    Next Story
    ×