search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐபிஎல் 2018- மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்கு 170 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது சென்னை
    X

    ஐபிஎல் 2018- மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்கு 170 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது சென்னை

    ரெய்னாவின் அரைசதத்தாலும், அம்பதி ராயுடு, டோனியின் பொறுப்பான ஆட்டத்தாலும் மும்பை இந்தியன்ஸ்க்கு 170 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது சென்னை #IPL2018 #CSKvMI
    ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 27-வது லீக் ஆட்டம் புனேவில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ்க்கு இடையில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி அம்பதி ராயுடு, ஷேன் வாட்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மெக்கிளேனகன் முதல் ஓவரை வீசினார். முதல் பந்தில் வாட்சன் ஒரு ரன் அடித்தார். 3-வது பந்தை அம்பதி ராயுடு சிக்சருக்கு தூக்கினார். இதனால் அம்பதி ராயுடு இன்று பவர்பிளேயில் வாணவேடிக்கை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அம்பதி ராயுடுவால் அதிரடியாக விளையாட முடியவில்லை. முதல் ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் 8 ரன்கள் எடுத்தது.

    2-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரில் அம்பதி ராயுடுவை திணற வைத்தார். பும்ரா இரண்டு ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 3-வது ஓவரை மெக்கிளேனகன் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை வாட்சன் பவுண்டரிக்கு விரட்டினார். அதன்பின் பந்து பவுண்டரி கோட்டிற்கு பறக்காததால் 8 ரன்கள் மட்டுமே கிடைத்தது.



    4-வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். இதில் ராயுடு ஒரு பவுண்டரி அடித்தார். இந்த ஓவரில் 6 ரன்கள் கிடைத்தது. 5-வது ஓவரை குருணால் பாண்டியா வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் வாட்சன் ஆட்டமிழந்தார். அவர் 11 பந்தில் ஒரு பவுண்டரியுடன் 12 ரன்கள் அடித்தார். அடுத்து ரெய்னா களம் இறங்கினார்.

    3-வது பந்தை அம்பதி ராயுடு சிக்சருக்கு தூக்க, கடைசி பந்தை ரெய்னா சிக்சருக்கு தூக்கினார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு 5-வது ஓவரில் 15 ரன்கள் கிடைத்தது.

    6-வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். முதல் நான்கு பந்து சென்னைக்கு கிளிக் ஆகவில்லை. ஐந்தாவது பந்தை பவுண்டரிக்கும், 6-வது பந்தை சிக்சருக்கும் விரட்டினார் அம்பதி ராயுடு. சென்னை சூப்பர் கிங்ஸ் பவர்பிளே-ஆன முதல் 6 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 51 ரன்கள் எடுத்தது.

    7-வது ஓவரை குருணால் பாண்டியா வீசினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரியுடன் சென்னை 9 ரன்கள் எடுத்தது. 8-வது ஓவரை மயாங்க் மார்கண்டே வீசினார். இந்த ஓவரில் சென்னை அணிக்கு 3 ரன்கள்தான் கிடைத்தது. 9-வது ஓவரை பென் கட்டிங் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ராயுடு இமாலய சிக்ஸ் விளாசினார். 3-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். இதனால் 14 ரன்கள் கிடைத்தது. 10-வது ஓவரை மார்கண்டே வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தை பவுண்டரிக்கும், 5-வது பந்தை சிக்சருக்கும் விரட்டினார் ரெய்னா. இந்த ஓவரில் 14 ரன்கள் கிடைத்தது.

    11-வது ஓவரை மெக்கிளேனகன் வீசினார். இந்த ஓவரில் ரெய்னா பவுண்டரி ஒன்று அடிக்க 6 ரன்கள் மட்டுமே கிடைத்தது. 12-வது ஓவரை குருணால் பாண்டியா வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் அம்பதி ராயுடு பென் கட்டிங்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 35 பந்தில் 2 பவுண்டரி, 4 சிக்சருடன் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் 11.2 ஓவரில் 97 ரன்கள் எடுத்திருந்தது. அம்பதி ராயுடு - ரெய்னா ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்தது.

    3-வது விக்கெட்டுக்கு ரெய்னா உடன் கேப்டன் டோனி ஜோடி சேர்ந்தார். 12-வது ஓவரில் விக்கெட் வீழ்த்தியதுடன் குருணால் பாண்டியா 2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

    13-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் ரெய்னா ஒரு ரன் அடித்தார். அத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் 100 ரன்னைத் தொட்டது. அதன்பின் சந்தித்த நான்கு பந்துகளிலும் டோனி ரன் அடிக்கவில்லை.

    14-வது  ஓவரை குருணால் பாண்டியா வீசினார். இந்த ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் 6 ரன்கள் எடுத்தது. 15-வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். இந்த ஓவரின் 4-வது மற்றும் ஐந்தாவது பந்தை டோனி பவுண்டரிக்கு விரட்டினார். இதனால் 11 ரன்கள் கிடைத்தது. 15 ஓவர் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் 2 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்திருந்தது.



    16-வது ஓவரை மார்கண்டே வீசினார். 2-வது பவுண்டரிக்கு விரட்டிய டோனி, 3-வது பந்தில் ஹெலிகாப்டர் ஷாட் மூலம் இமாலய சிக்ஸ் விளாசினார். இந்த ஓவரில் 14 ரன்கள் கிடைத்தது.

    17-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை ரெய்னா பவுண்டரிக்கு விரட்டினார். 4-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி 35 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் அரைசதம் அடித்தார். இந்த ஓவரில் 12  ரன்கள் கிடைத்தது. 15-வது ஓவருக்குப் பின் சராசரியாக 10 ரன்கள் கிடைத்ததால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்கோர் 150 ரன்களை தாண்டும் நிலை ஏற்பட்டது.

    18-வது ஓவரை மெக்கிளேனகன் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் டோனி ஆட்டமிழந்தார். அவர் 21 பந்தில் 3 பவுண்டரி, 1 சிக்சருடன் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டோனி அவுட்டாகும்போது சென்னை சூப்பர் கிங்ஸ் 17.1 ஓவரில் 143 ரன்கள் எடுத்திருந்தது. ரெய்னா- டோனி ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 46 ரன்கள் சேர்த்தது.

    4-வது விக்கெட்டுக்கு ரெய்னா உடன் பிராவோ ஜோடி சேர்ந்தார். பிராவோ தான் சந்தித்த முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரன் ஏற்றத்தில் சறுக்கல் ஏற்பட்டது. 5-வது விக்கெட்டுக்கு ரெய்னா உடன் சாம் பில்லிங்ஸ் ஜோடி சேர்ந்தார். இரண்டு விக்கெட்டுக்கள் இழந்ததால் 18-வது ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் 4 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    19-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் 2 பந்தை சிக்சருக்கு தூக்கினார் ரெய்னா. இதனால் 11 ரன்கள் கிடைத்தது. சென்னை அணியின் ஸ்கோரும் 150-ஐ தாண்டியது.

    கடைசி ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். முதல் மூன்று பந்தில் தலா ஒரு ரன் அடித்தது சென்னை. 4-வது பந்தில் சாம் பில்லிங்ஸ் ஆட்டமிழந்தார். 5-வது பந்தில் ரெய்னா இரண்டு ரன்கள் அடித்தார். கடைசி பந்தை ரெய்னா சிக்சருக்கு தூக்கினார். இதனால் சென்னை 20 ஒவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்துள்ளது.

    இதனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 170 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். ரெய்னா 47 பந்தில் 6 பவுண்டரி, 4 சிக்சருடன் 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    Next Story
    ×