search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐபிஎல் 2018- பர்பிள் தொப்பியை வைத்திருக்கும் மயாங்க் மார்கண்டே
    X

    ஐபிஎல் 2018- பர்பிள் தொப்பியை வைத்திருக்கும் மயாங்க் மார்கண்டே

    ஐபிஎல் 11-வது சீசனில் 8 விக்கெட்டுக்கள் வீழ்த்தி பர்பிள் தொப்பியை தக்க வைத்துள்ளார் மும்பை இந்தியன்ஸ் சுழற்பந்து வீச்சாளர் மார்கண்டே. #IPL2018
    ஐபிஎல் 11-வது சீசன் கடந்த 7-ந்தேதி தொடங்கியது. சென்னை சூப்பர் கிஙஸ் அணியை தவிர்த்து மற்ற அணிகள் இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி முடித்துவிட்டன. இதுவரை நடைபெற்று முடிந்துள்ள போட்டிகளில் சுழற்பந்து வீச்சாளர்கள் சாதித்த போதிலும், வேகப்பந்து வீச்சாளர்களும் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.

    சுழற்பந்து வீச்சில் குறிப்பாக லெக்ஸ்பின்னர்களும், ரிஸ்ட் ஸ்பின்னர்களும் அசத்தி வருகின்றன. மும்பை இந்தியன்ஸ் அணியின் மயாங்க் மார்கண்டே நான்கு போட்டிகளில் 15 ஓவர்கள் வீசி 113 ரன்கள் விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுக்கள் வீழ்த்தி பர்பிள் தொப்பியை தன்வசம் வைத்துள்ளார்.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கிறிஸ் வோக்ஸ் 4 போட்டியில் 14.2 ஓவர்கள் வீசி 150 ரன்கள் விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுனிலை நரைன் 5 போட்டிகளில் 19 ஓவர்கள் வீசுி 130 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கட்டுக்கள் சாய்த்துள்ளார்.

    ஆர்சிபியின் உமேஷ் யாதவ் 4 போட்டிகளில் 16 ஓவர்கள் வீசி 145 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுக்கள் கைப்பற்றி 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.

    ராகுல் டெவாடியா 4 போட்டியில் 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தி 5-வது இடத்தில் உள்ளார். அதன்பின் சித்தார்த் கவுல், குல்தீப் யாதவ், டிரென்ட் போல்ட், குருணால் பாண்டியா, புவனேஸ்வர் குமார் முறையே 6 முதல் 10 இடங்களை பிடித்துள்ளனர்.



    அதிக ரன்கள் அடித்தவர்களில் விராட் கோலி 4 இன்னிங்சில் 201 ரன்களுடன் முதல் இடம் வகிக்கிறார். இதில் இரண்டு அரைசதங்கள் அடங்கும். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சஞ்சு சாம்சன் 185 ரன்களும், கிறிஸ் கெய்ல் 167 ரன்களும், நிதிஷ் ராணா 162 ரன்களும், அந்த்ரே ரஸல் 153 ரன்களும், கேஎல் ராகுல் 153 ரன்களும், தினேஷ் கார்த்திக் 151 ரன்களும், கேன் வில்லியம்சன் 146 ரன்களும், எவின் லெவிஸ் 142 ரன்களும், கருண் நாயர் 139 ரன்களும் அடித்துள்ளனர்.

    அந்த்ரே ரஸல் 19 சிக்சர்களடன் முதல் இடத்திலும், கிறிஸ் கெய்ல் 15 சிக்சர்களுடன் 2-வது இடத்திலும், சஞ்சு சாம்சன் 12 சிக்சர்களுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.
    Next Story
    ×