search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐபிஎல் 3-வது ஆட்டம்- கேகேஆர்க்கு 177 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆர்சிபி
    X

    ஐபிஎல் 3-வது ஆட்டம்- கேகேஆர்க்கு 177 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆர்சிபி

    ஐபிஎல் 3-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 177 ரன்களை இலக்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்ணயித்துள்ளது. #IPL2018 #KKRvRCB #RCBvKKR #VivoIPL

    கொல்கத்தா:

    ஐபிஎல் 11-வது சீசனின் 3-வது ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார். இதையடுத்து பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது.

    அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குயின்டான் டி காக், மெக்கல்லம் ஆகியோர் களமிறங்கினர். டி காக் 4 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் பியூஸ் சாவ்லா பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின் கேப்டன் விராட் கோலி, மெக்கல் உடன் இணைந்து நிதானமாக ரன் குவித்தார். 27 பந்துகளில் 43 ரன்கள் எடுத்த மெக்கல்லம் நரேன் பந்தில் போல்டாகி வேளியேறினார்.



    அவரைத்தொடர்ந்து களமிறங்கிய டி வில்லியர்ஸ் அதிரடியாக ரன் குவித்தார். அவர் 23 பந்தில் ஐந்து சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்த பந்திலேயே விராட் கோலி 33 பந்தில் 31 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நிதிஷ் ராணா பந்தில் போல்டானார். 

    இறுதியில் மந்தீப் சிங் அதிரடியாக விளையாடி 18 பந்தில் 37 ரன்கள் எடுத்தார். பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது. கொல்கத்தா அணியின் பந்துவீச்சில் வினய் குமார், நிதிஷ் ராணா ஆகியோர் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர். 

    இதன்மூலம் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 177 ரன்களை இலக்காக பெங்களூரு அணி நிர்ணயித்துள்ளது.  #IPL2018 #KKRvRCB #RCBvKKR #VivoIPL
    Next Story
    ×