search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    50 முறை ஹாட்ரிக் கோல் அடித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை
    X

    50 முறை ஹாட்ரிக் கோல் அடித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை

    ரியல் மாட்ரிட் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ 50 முறை ஹாட்ரிக் கோல் அடித்து சாதனைப் படைத்துள்ளார். #LaLiga #CR7
    கால்பந்து போட்டியில் இந்த தலைமுறையில் போர்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அர்ஜென்டினாவின் மெஸ்சி, பிரேசிலின் நெய்மர் ஆகியோர் தலைசிறந்த வீரர்களாக கருதப்படுகிறார்கள்.

    இவர்களில் மெஸ்சி, ரொனால்டோ ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. மெஸ்சி பார்சிலோனாவிற்கும், ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணிக்காகவும் விளையாடி வருகிறார்கள்.

    லா லிகாவில் நேற்று நடைபெற்ற போட்டி ஒன்றில் ரியல் மாட்ரிட் - கிரோனா அணிகள் மோதின. இதில் ரியல் மாட்ரிட் 6-3 என வெற்றி பெற்றது. இதில் கிறிஸ்டியானோ நான்கு கோல்கள் அடித்தார். இதன்மூலம் அர்ஜென்டினா மற்றும் கிளப் அணிகளுக்காக 50 முறை ஹாட்ரிக் கோல் அடித்து சாதனைப் படைத்துள்ளார்.



    லா லிகாவில் 34 முறையும், சாம்பியன்ஸ் லீக்கில் 7 முறையும், அர்ஜென்டினாவிற்காக நான்கு முறையும், கேபா டெல் ரே-யில் இரண்டு முறையும் ஹாட்ரிக் கோல் அடித்துள்ளார். அத்துடன் பிரீமியர் லீக், ஐரோப்பியா சாம்பியன்ஷிப் குவாலிபையர், பிபா கிளப் உலகக்கோப்பையில் தலா ஒருமுறை ஹாட்ரிக் கோல் அடித்துள்ளார்.

    இந்த சீசனின் தொடக்கத்தில் மோசமாக விளையாடிய கிறிஸ்டியானோ ரொனால்டோ அதன்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதுவரை 22 கோல்கள் அடித்துள்ளார். மெஸ்சி 25 கோல்கள் அடித்துள்ளார். அனைத்து போட்டிகளிலும் சேர்த்து 37 கோல்கள் அடித்துள்ளார்.
    Next Story
    ×