search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலி, டி வில்லியர்ஸ், கேன் வில்லியம்சன் யுக்திகளை காப்பி அடித்தேன் - ஸ்மித்
    X

    விராட் கோலி, டி வில்லியர்ஸ், கேன் வில்லியம்சன் யுக்திகளை காப்பி அடித்தேன் - ஸ்மித்

    டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாட விராட் கோலி, டி வில்லியர்ஸ், கேன் வில்லியம்சின் யுக்திகளை காப்பி அடித்தேன் என ஸ்மித் கூறியுள்ளார். #Smith #SAvAUS
    ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக இருக்கும் ஸ்டீவன் ஸ்மித் டெஸ்ட் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 61 போட்டிகளில் 111 இன்னிங்சில் பேட்டிங் செய்து 6057 ரன்கள் குவித்துள்ளார். தலா 23 சதம், அரைசதங்களை பதிவு செய்துள்ள இவர், 63.75 சராசரி வைத்துள்ளார். இப்போதைய காலக்கட்டத்தில் அவரது சராசரியை யாரும் தொட முடியவில்லை.

    2010-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்டில் அறிமுகமானார். 28 வயதாகும் இவர் தொடக்க காலத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஆனால் தற்போது வியக்கத்தக்க வகையில விளையாடி வருகிறார். ஆஸ்திரேலியா அணி தென்ஆப்பிரிக்கா சென்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையில் நான்கு டெஸ்ட் போட்டிகள் நடக்க இருக்கிறது. முதல் டெஸ்ட் மார்ச் 1-ந்தேதி டர்பனில் தொடங்குகிறது.



    இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் நோக்கத்தில் முத்தரப்பு டி20 தொடரை புறக்கணித்து விட்டு, தீவிர பயிற்சியில் ஸ்மித் ஈடுபட்டார். நான் டி வில்லியர்சின் யுக்திகளை காப்பிடித்துள்ளேன். அவர் எப்படி விளையாடுகிறாரோ அதேபோல் நானும் விளையாடுவேன் என ஸ்மித் கூறியுள்ளார்.

    இதுகுறித்து ஸ்மித் கூறுகையில் ‘‘உலகின் தலைசிறந்த வீரர்களின் ஆட்டத்தை நான் பார்ப்பேன். சில நேரங்களில் அவர்களை போன்று பேட்டிங் செய்ய முயற்சி செய்வேன். உலசின் தலைசிறந்த வீரர்கள் என்பதால், அவர்களின் யுக்திகளை கற்றுக் கொள்ள முயற்சி செய்வேன்’’ என்றார்.
    Next Story
    ×