search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு
    X

    தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு

    தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது ஏற்பட்டதால், வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. #LokSabhaElections2019 #TNElections2019
    சென்னை:

    பாராளுமன்ற இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. தமிழகம் புதுவையில் உள்ள 39 பாராளுமன்றத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அத்துடன், 19 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. வாக்காளர்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களிக்கின்றனர்.

    சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குப்பதிவு தாமதம் ஆனது. சென்னை அண்ணா நகர் மேற்கு பகுதியில் உள்ள ஒரு வாக்குப்பதிவு இயந்திரம் வேலை செய்யாததால் தாமதம் ஏற்பட்டது.

    நெல்லை கோடீஸ்வரன் நகர், நாமக்கல் கோட்டை நகராட்சி பள்ளி, ஒட்டன்சத்திரம், காட்பாடி எல்ஜிபுதூர், திருப்பூர் அரண்மனைபுதூர், பெரியகுளம் செவன்த் டே பள்ளி, நாகையில் உள்ள 151வது பூத், கோவை சித்தாபுதூர் ஆகிய இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது ஏற்பட்டதால் வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டது.



    இதேபோல் அஸ்ஸாம், கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுது ஏற்பட்டதால் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.

    பொள்ளாச்சி கோட்டூர் சாலை பெண்கள் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் பூத் ஏஜெண்டுகள் யார் என்பதில் குழப்பம் ஏற்பட்டதால் வாக்குப்பதிவை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. வாக்குச்சாவடி அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். #LokSabhaElections2019 #TNElections2019

    Next Story
    ×