search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கழுத்து தண்டுவட நரம்பு பாதிப்புகள்
    X

    கழுத்து தண்டுவட நரம்பு பாதிப்புகள்

    கழுத்தில் இந்த சவ்வு மற்றும் எலும்பு பாதிப்பினை தண்டு வட நரம்பையும், தண்டு வடத்தில் இருந்து வரும் பக்க நரம்புகளும் அழுத்தப்பட்டு பல்வேறு பிரச்சினைகள் உண்டாகலாம்.
    தண்டுவட நரம்பு என்பது மூளையில் இருந்து கைகள், கால்கள் மற்றும் மற்ற பகுதி களுக்கு செல்லும் நரம்புகளின் தொகுப்பு. மேலும் உடலின் பாகங்களில் இருந்து தொடு உணர்ச்சியையும் மூளைக்கு கொண்டு செல்லும் நரம்புகளும் அடங்கும். தண்டுவட பிரச்சினைகள் (Spinal Cord Disease) பல வகைப்படும். அதில் Cervical Spondylosis மற்றும் lumbar Spondylosis என்பவை மிக முக்கியமான அதிகம் காணப்படும் பிரச்சினைகள். இந்த இரண்டு பிரச்சினைகளிலும் சவ்வு பாதிப்பும், அது தண்டுவட நரம்புகளை அழுத்துவதால் ஏற்படும் பல பிரச்சினைகளும் உண்டு.

    கழுத்தில் இந்த சவ்வு மற்றும் எலும்பு பாதிப்பினை தண்டு வட நரம்பையும், தண்டு வடத்தில் இருந்து வரும் பக்க நரம்புகளும் அழுத்தப்பட்டு பல்வேறு பிரச்சினைகள் உண்டாகலாம். இந்த பிரச்சினைகள் பொதுவாக கழுத்து வலி, கழுத்து பிடிப்பு, சுளுக்கு என்று பாதிக்கப்பட்டவர்களுக்கு இருக்கும்.

    சில நேரங்களில் பாதிப்பு மோசமாக இருக்கும்போது கழுத்தை சிறிதும் திருப்ப முடியாத நிலை, மற்றும் கழுத்தில் இருந்து கைகளுக்கு வலி மின்சாரம் பாய்ச்சுவது போல் பரவுதல் இருக்கலாம். இன்னும் மோசமானால் கைகளில் உணர்ச்சி குறைவு ஏற்படலாம். கைகளில் பலம் குறைந்து காணப்படலாம்.

    இது ரேடிக்குலோபதி (Radiculopathy) ஆகும். இன்னொரு வகை மைலோபதி (Myelopathy) ஆகும். இந்த பிரச்சினை ஏற்பட்டால் கைகள் மட்டும் அல்லாது கால்களிலும் பாதிப்பு ஏற்படும். கைகள், மற்றும் கால்கள், விரைத்து போய் (Stiffness) விறகு கட்டை மாதிரி, பலம் குறைந்து, நடக்கும்போது தள்ளாட்டம் ஏற்படுவது, கால்கள், கைகளில் உணர்ச்சி குறைவு ஏற்படலாம்.

    மேலும் மோசமான பாதிப்புகள் ஏற்பட்டால், சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதில் சிக்கல் உண்டாகலாம். இதற்கு முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லை என்றால் ஒரு கட்டத்தில் நடக்க முடியாமல், கைகள் அசைவற்று, கழுத்துக்கு கீழ் உணர்ச்சி இல்லாமல் போகலாம்.

    இந்த பிரச்சினை முன்பெல்லாம் 40 வயதிற்கு பின்னரே பாதிப்புகள் இருந்தது. வயதானவர்களுக்கு அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது இளம் வயதினருக்கு இவை ஏற்படுகிறது.

    இன்றைய காலகட்டத்தில் இளவயதினருக்கு குறிப்பாக கணினி திரை, அலைபேசி திரை, தொலைக்காட்சி இவற்றை பயன்படுத்துவோருக்கும், அலைபேசியை கழுத்தை குனிந்து கொண்டு அதிக நேரம் பயன்படுத்துவோருக்கும் அதிகமாக பாதிப்புகள் உண்டாகின்றன.



    T.B. நோய் தாக்குதலும் தண்டுவடப் பகுதியில் காணப்படும். நடுமுதுகுப் பகுதியில் (Thoracic) காணப்படும் இந்நோய் கழுத்துத் தண்டு வடப்பகுதியையும் தாக்குகிறது. இந்த நோயும், கழுத்து வலி ஏற்படுத்துகிறது. மோசமான பாதிப்பு ஏற்படும்போது சீல் பிடித்து தண்டுவட எலும்பு சேதம் ஆகி தண்டுவட நரம்பை அழுத்தினால் 2 கை, கால்கள் செயல் இழந்து போவதற்கும், கழுத்துக்கு கீழ் உணர்ச்சி இல்லாமல் போவதற்கும் சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதில் சிக்கல் ஏற்படுவதற்கும் மோசமாக பாதித்தால் உயிருக்கு கூட பாதிப்பு ஏற்படலாம்.

    இந்த கழுத்து தண்டுவடப் பிரச்சினைகளுக்கு பலவித தீர்வுகள், சிகிச்சை முறைகள் உள்ளது. சிறிய பாதிப்பு இருக்கும்போதே MRI SCAN எடுத்துக் கொள்வது நல்லது. MRI SCAN மூலம் சவ்வு, அழுத்தம், தண்டுவட நரம்பு பாதிப்பு, சீழ் போன்றவை கண்டறிய முடிகிறது.

    சிறிய பாதிப்புகளுக்கு கழுத்து, தலையை சரியான விகிதத்தில் வைத்துக் கொண்டு வேலை செய்வது (Position adjustment) சில சுலபமான பயிற்சிகள் செய்வது மட்டுமே முழு தீர்வாகிறது. மேலும் அதிக பாரம் சுமக்காமல், இருப்பதும் அவசியம். வலி அதிகமாக இருந்தால் சில நேரங்களில் மாத்திரைகளும் பயன்படும்.

    மோசமான அழுத்தம், மற்றும் தண்டுவட நரம்பு பாதிப்பு ஏற்பட்டாலோ, பயிற்சியினால் பயன் இல்லாமல் இருந்தாலோ அறுவை சிகிச்சை தேவைப்படும். TB நோய்க்கும், 18 மாதங்கள் மருந்துகளும், அறுவை சிகிச்சையும் தேவைப்படலாம்.

    இந்த அறுவை சிகிச்சைகள், சவ்வுகளை அகற்றுவது (Discectomy), Titaniumcage (டைட்டானியம் கேஜ்) வைத்தல், Bonegraft - fusion (எலும்பு மூலம் சிகிச்சை) மற்றும் Laminectomy (லேமி னெக்டமி) பின்பகுதி தண்டு வட சிகிச்சை (Screws stablis ation) என பல வகைப்படும். இவை அனைத்தும் அதிநவீன நுண்நோக்கி (Neuro Microscope) உதவியுடன் செய்யப்படுகிறது.

    மேலும் விபரங்களுக்கு www.neurosurgeontirunelveli.in, www.neurosurgeontirunelveli.com என்ற இணைய முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

    Dr.இராஜா S.விக்னேஷ்
    Next Story
    ×