என் மலர்tooltip icon

    வீடியோ


    • மும்பையில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த வாலிபர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • கொரோனாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் இளைஞர்கள் மாரடைப்பால் திடீரென உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது.

    மகாராஷ்டிரா மாநிலம் தானே அருகே மீரா ரோடு பகுதியில் தனியார் நிறுவனத்தின் தலைமையில் ஊழியர்களிடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

    இந்த போட்டியில் ராம் கணேஷ் தேவார் என்ற (42) நபர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில், ராம் கணேஷ் பேட்டிங் செய்கிறார். அப்போது அவர் எதிர்கொண்ட பந்தை இறங்கி வந்து விளாசி சிக்சராக மாற்றினார். பின்னர், அடுத்த பந்தை எதிர்கொள்ளத் தயாராகும் நிலையில், அப்படியே மயங்கி விழுகிறார். இதைப் பார்த்த சக வீரர்கள் உடனே ஓடிச் சென்று முதலுதவி செய்ய முயல்கின்றனர். ஆனால், அதற்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை. அவர், எந்த அசைவுமின்றி அப்படியே கிடக்கிறார்.

    உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. போலீசார் திடீர் மரணம் என வழக்கு பதிவு செய்து, சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நடனம், விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் நபர்கள், சமீபகாலமாக எதிர்பாராதவிதமாக திடீரென கீழேவிழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகமாகி வருகின்றன. அதிலும், கொரோனாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் இளைஞர்கள் மாரடைப்பால் உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது.

    அதிலும் குறிப்பாக, மாரடைப்பு காரணமாக 16 வயது முதல் 30 வயதிற்குட்பட்ட இளம் வயது மரணங்கள் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    • முன்னாள் மாணவி அளித்த புகாரில், ஸ்ரீஜித் கிருஷ்ணாவை போலீசார் கைது செய்தனர்.
    • நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.

    சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா அறக்கட்டளை வளாகத்தில் உள்ள கல்லூரியில் படித்த முன்னாள் மாணவி ஒருவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு தன்னை முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணா பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார் அளித்திருந்தார்.

    அப்பெண்ணிடம் அடையாறு மகளிர் போலீசார், வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை மேற்கொண்ட நிலையில், கடந்த ஏப்ரல் 22ம் தேதி நீலாங்கரை போலீசாரால் ஸ்ரீஜித் கிருஷ்ணா கைது செய்யப்பட்டார்.

    இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.

    இந்நிலையில் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீஜித் கிருஷ்ணா மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது. வெளிநாடு செல்ல வேண்டுமென்றால் விசாரணை நீதிமன்றத்தில் உரிய அனுமதி பெற வேண்டுமென ஸ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

    தற்போது ஸ்ரீஜித் கலாஷேத்ராவில் பணியாற்றவில்லை. தனியாக நடனப்பள்ளி அமைத்து மாணவிகளுக்கு நடனம் கற்றுக்கொடுத்து வருகிறார்.

    கடந்தாண்டு இதே கல்லூரியில் பணியாற்றிய நடனத்துறை உதவி பேராசிரியர் ஹரி பத்மன் மீது மாணவிகள் கொடுத்த பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×