என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்

சாம்சங் கேலக்ஸி எஸ்22 சீரிஸ்
இந்த ஸ்மார்ட்போன் பயன்படுத்துறீங்களா? - திடீரென ஏற்பட்ட சிக்கல்
ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள ஒரு அம்சம் 1000-க்கும் மேற்பட்ட செயலிகள் மற்றும் கேம்களின் செயல்திறனை தடுப்பதாக கூறப்படுகிறது.
சாம்சங் நிறுவனம் சமீபத்தில் கேலக்ஸி எஸ்22 சீரிஸை இந்தியா உட்பட பல நாடுகளில் அறிமுகம் செய்தது. பல்வேறு சிறப்பம்சங்கள் நிறைந்த இந்த போனில் புதிய சிக்கல் ஒன்று ஏற்பட்டிருப்பதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதன்படி சாம்சங் கேலக்ஸி எஸ்22 சீரிஸ் போனில் உள்ள கேம் ஆப்டிமைசிங் சர்விஸ் பிற செயலிகளின் செயல்பாடுகளை குறைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேமிங் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக கேமிங் ஆப்டிமைசிங் சர்வீஸ் அம்சம் எஸ் 22 சீரிஸில் தரப்பட்டுள்ளது. ஆனால் இந்த அம்சத்தை பயன்படுத்தும்போது 1000-க்கும் மேற்பட்ட செயலிகள் மற்றும் கேம்களின் செயல்திறன் பாதிக்கப்படுவதாக புகார் வந்துள்ளது.
இருப்பினும் ஃபேஸ்புக் உள்ளிட்ட பிரபலமான செயலிகளில் எந்த பாதிப்பும் இல்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து சாம்சங் நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில், சிபியூ, ஜிபியூ செயல்திறனை மேம்படுத்தவே இந்த கேம் ஆப்டிமைசிங் அம்சம் வேலை செய்கிறது. பிற செயலிகள் இதனால் பாதிக்கப்படுவதில்லை. இருப்பினும் வர இருக்கும் புதிய அப்டேட்டில் இந்த பிரச்சனை தீர்க்கப்படும் என தெரிவித்துள்ளது.
Next Story






