என் மலர்
தொழில்நுட்பச் செய்திகள்

5ஜி
பட்ஜெட் விலையில் புது 5ஜி ஸ்மார்ட்போன் உருவாக்கும் இன்பினிக்ஸ்
இன்பினிக்ஸ் நிறுவனம் விரைவில் தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
ஹாங்-காங்கை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான இன்பினிக்ஸ் இந்தியாவில் தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. இன்பினிக்ஸ் இந்தியா தலைமை செயல் அதிகாரி அனிஷ் கபூர் தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இதனை அறிவித்தார்.
ஸ்மார்ட்போன் மட்டுமின்றி புதிய 55 இன்ச் டி.வி. மாடலையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். முன்னதாக இன்பினிக்ஸ் நிறுவனம் தனது முதல் லேப்டாப் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

“ஸ்மார்ட்போனின் விலையை நிர்ணயிக்க பல்வேறு விஷயங்களை எதிர்கொள்ள வேண்டும். உதிரிபாகங்கள் விலை மட்டுமின்றி, டாலர் மதிப்பு கடந்த சில மாதங்களில் 8 சதவீதம் வரை அதிகரித்து இருக்கிறது. இது ஸ்மார்ட்போனின் ஒட்டுமொத்த விலையை பாதிக்கும். இருந்தபோதும், ரூ. 20 ஆயிரம் பட்ஜெட்டிற்குள் விலையை நிர்ணயிக்க திட்டமிட்டுள்ளோம்,” என அவர் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் 5 முதல் 6 ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய இன்பினிக்ஸ் திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்ய திட்டமிட்டிருந்த 55 இன்ச் டி.வி. மாடல் உருவாக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த மாடல் அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டிற்குள் அறிமுகமாகும்.
Next Story