என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    சாம்சங் ஸ்மார்ட்போன்
    X
    சாம்சங் ஸ்மார்ட்போன்

    சாம்சங் தளத்திலேயே அம்பலமான கேலக்ஸி எஸ்21 எப்.இ. விலை விவரங்கள்

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்21 எப்.இ. ஸ்மார்ட்போன் விலை மற்றும் அம்சங்கள் அந்நிறுவன வலைதளத்தில் லீக் ஆகி இருக்கிறது.


    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்21 எப்.இ. விவரங்கள் சாம்சங் ஐயர்லாந்து வலைதளத்தில் இடம்பெற்றது. இந்த ஸ்மார்ட்போன் விரைவில் துவங்க இருக்கும் சி.இ.எஸ். 2022 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. சாம்சங் வலைதள விவரங்களின்படி இந்த ஸ்மார்ட்போன் 128 ஜி.பி. மற்றும் 256 ஜி.பி. மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.

    மேலும் இந்த ஸ்மார்ட்போன் நான்கு வித நிறங்களில் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இதன் 128 ஜி.பி. விலை இந்திய மதிப்பில் ரூ. 65,800 வரை நிர்ணயிக்கப்படலாம் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதன் 256 ஜி.பி. விலை இந்திய மதிப்பில் ரூ. 71,800 வரை நிர்ணயிக்கப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

     சாம்சங் ஸ்மார்ட்போன்

    அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி எஸ்21 எப்.இ. மாடலில் 6.4 இன்ச் பிளாட் டைனமிக் அமோலெட் இன்பினிட்டி ஒ டிஸ்ப்ளே, அல்ட்ராசோனிக் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், 6 ஜி.பி. அல்லது 8 ஜி.பி. மெமரி, 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் பவர்ஷேர் வழங்கப்படும் என தெரிகிறது.
    Next Story
    ×