என் மலர்

  தொழில்நுட்பச் செய்திகள்

  ஒன்பிளஸ்
  X
  ஒன்பிளஸ்

  ஸ்மார்ட்போன்கள் விற்பனையில் புது மைல்கல் எட்டிய ஒன்பிளஸ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஒன்பிளஸ் நிறுவனம் சர்வதேச ஸ்மார்ட்போன்கள் விற்பனையில் புது மைல்கல் எட்டியதாக அறிவித்து இருக்கிறது.


  ஒன்பிளஸ் நிறுவனம் தனது 8-வது ஆண்டு விழாவை இந்த வாரம் கொண்டாடி வருகிறது. தற்போது சர்வதேச சந்தையில் ஒரு கோடி ஸ்மார்ட்போன்களை ஒன்பிளஸ் விற்றுள்ளது. டிசம்பர் 17 வரையிலான விற்பனையில் இந்த மைல்கல்லை ஒன்பிளஸ் எட்டியது. இதுதவிர உலகம் முழுக்க இரண்டு கோடிக்கும் அதிகமானோர் ரெட் கேபிள் கிளப் உறுப்பினர்களாகி இருக்கின்றனர்.

  ஒன்பிளஸ் கம்யூனிட்டி ஃபோரம் உறுப்பினர்கள் எண்ணிக்கை இந்த ஆண்டு 1.10 கோடியாக அதிகரித்து இருக்கிறது. இந்த தளத்தில் 11.6 கோடி குறுந்தகவல்கள் பகிரப்படுகின்றன.

   ஒன்பிளஸ்

  இந்திய சந்தையில் ஒன்பிளஸ் நிறுவனம் 29 சதவீதம் வருடாந்திர வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் மட்டும் ரூ. 30 ஆயிரம் மதிப்பிலான ஸ்மார்ட்போன்கள் பிரிவில், ஒன்பிளஸ் 30 சதவீத பங்குகளை பெற்றுள்ளது.

  வட அமெரிக்காவில் இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் மட்டும் ஒன்பிளஸ் நிறுவனம் 712 சதவீதம் வருடாந்திர வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ஐரோப்பாவில் வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் பிராண்டுகள் பட்டியலில் ஒன்பிளஸ் முதலிடம் பிடித்துள்ளது. 

  ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 10 சீரிஸ் மாடல்கள் அடுத்த ஆண்டு துவக்கத்திலும் நார்டு 2 சி.இ. மற்றும் மிட் ரேன்ஜ் மாடல்கள் அடுத்தடுத்து அறிமுகமாகின்றன.

  Next Story
  ×