search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சியோமி எம்ஐ 10டி
    X
    சியோமி எம்ஐ 10டி

    அதிரடி அம்சங்களுடன் உருவாகும் ரெட்மி நோட் 10

    சியோமியின் ரெட்மி பிராண்டு தனது நோட் 10 ஸ்மார்ட்போனினை அதிரடி அம்சங்களுடன் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


    சியோமி நிறுவனம் ரெட்மி நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ரெட்மி நோட் 10 சீரிஸ் பற்றிய தகவல்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன.

    அந்த வகையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ரெட்மி நோட் 10 சீரிஸ் 108 எம்பி பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என்றும் இந்த சீரிஸ் இம்மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. 

     சியோமி எம்ஐ 10டி

    சீன டிப்ஸ்டர் வெளியிட்ட தகவல்களின் படி ரெட்மி நோட் 10 சீரிஸ் முதற்கட்டமாக சீன சந்தையில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. சீன சந்தையில் ரெட்மி நோட் 10 சீரிஸ் 5ஜி வசதி மற்றும் உயர் ரக சிறப்பம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. 

    ரெட்மி நோட் 10 மாடல் ஐரோப்பிய சந்தையில் அறிமுகமான எம்ஐ 10டி லைட் மாடலை தழுவி உருவாகும் என கூறப்படுகிறது. சீன சந்தையில் இந்த ஸ்மார்ட்போன் 108 எம்பி சென்சாருடன் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இதனுடன் ஒற்றை மேக்ரோ சென்சார் வழங்கப்படும் என தெரிகிறது.

    இதன் இந்திய வேரியண்ட்டில் 5ஜி சிப்செட் நீக்கப்பட்டு ஸ்னாப்டிராகன் 720ஜி 4ஜி சிப்செட் வழங்கப்படும் என கூறப்படுகிறது. 108 எம்பி சென்சார் ப்ரோ வேரியண்ட்டில் வழங்கப்படும் என்றும் இந்த வேரியண்ட்டில் அதிக ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

    Next Story
    ×