search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சிங்காரி ஆப்
    X
    சிங்காரி ஆப்

    வெளியான ஒரே மாதத்தில் ஒரு கோடி டவுன்லோட்களை கடந்த சிங்காரி ஆப்

    டிக்டாக் செயலிக்கு மாற்றான இந்திய செயலி சிங்காரி பிளே ஸ்டோரில் ஒரே மாதத்திற்குள் ஒரு கோடி டவுன்லோட்களை கடந்துள்ளது.
     

    சீனாவின் டிக்டாக் செயலிக்கு மாற்றாக இந்தியாவை சேர்ந்த சிங்காரி ஆப் வெளியான 22 நாட்களில் ஒரு கோடி டவுன்லோட்களை கடந்து இருக்கிறது. சிங்காரி செயலி கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் இரண்டு முன்னணி செயலிகளில் ஒன்றாக இருக்கிறது. வெளியான முதல் வாரத்தில் சிங்காரி ஆப் 25 லட்சம் டவுன்லோட்களை கடந்ததாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    சில தினங்களுக்கு முன் இந்தியாவில் டிக்டாக் உள்பட 59 சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து சிங்காரி போன்ற இந்திய செயலிகளுக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. 
    சிங்காரி ஆப்
    அந்தவகையில் சிங்காரி ஆப் வெளியான முப்பது நிமிடங்களில் பத்து லட்சத்திற்கும் அதிக டவுன்லோட்களை கடந்ததாக இந்த செயலியின் இணை நிறுவனர் சுமித் ஜோஷ் தெரிவித்து இருக்கிறார்.

    தற்சமயம் கூகுள் பிளே ஸ்டோரில் 1.1 கோடி டவுன்லோட்களை சிங்காரி ஆப் கடந்துள்ளது. சிங்காரி செயலியை உருவாக்கிய குளோபுசாஃப்ட் நிறுவன வலைதளத்தில் மால்வேர் இருப்பதாக பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் சில தினங்களுக்கு முன் எச்சரிக்கை விடுத்து இருந்தார். இதற்கு பதில் அளித்த சுமித் ஜோஷ் இந்த பிழை விரைவில் சரி செய்யப்படும் என தெரிவித்தார்.
    Next Story
    ×