search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கேலக்ஸி நோட் 10
    X
    கேலக்ஸி நோட் 10

    16 ஜிபி ரேமுடன் உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன் 16 ஜிபி ரேமுடன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 20 சீரிஸ் மாடல்களில் அதிகபட்சம் 16ஜிபி ரேம் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இது கேலக்ஸி நோட் 20 மற்றும் நோட் 20 பிளஸ் என இருமாடல்களிலும் ஸ்டான்டர்டு வேரியண்ட் ஆக இருக்கும் என கூறப்படுகிறது. 

    இந்த ஆண்டு துவக்கத்தில் சாம்சங் நிறுவனம் 16 ஜிபி ரேம் உற்பத்தியை துவங்கியது. ஏற்கனவே கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா 5ஜி மாடலில் 16 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கேலக்ஸி நோட் 20 சீரிஸ்களிலும் இத்தகைய ரேம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி நோட் 20 சீரிஸ் மாடல்களில் QHD டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 865 அல்லது எக்சைனோஸ் சிப்செட் ஒவ்வொரு சந்தைக்கு ஏற்ப வேறுபடும் என தெரிகிறது.

    கேலக்ஸி நோட் 20 சீரிஸ் ரென்டர்

    முன்னதாக எக்சைனோஸ் மற்றும் ஸ்னாப்டிராகன் பிராசஸர்களிடையே அதிக வேறுபாடு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் சாம்சங் நிறுவனம் எக்சைனோஸ் பிராசஸர்களை உருவாக்க தடை கோரியும் வழக்கு தொடரப்பட்டது. அந்த வகையில் புதிய எக்சைனோஸ் 992 பிராசஸர் சீராக இயங்கும் என கூறப்படுகிறது.

    கேலக்ஸி நோட் 20 சீரிஸ் மாடல்களில் புகைப்படங்களை எடுக்க புதுவித கேமரா சென்சார்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதுதவிர கேலக்ஸி எஸ்20 சீரிஸ் போன்றே இதிலும் 4000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படலாம் என தெரிகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் கேலக்ஸி நோட் 20 மற்றும் கேலக்ஸி ஃபோல்டு 2 மாடல்கள் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    Next Story
    ×