search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஒன்பிளஸ் கான்செப்ட் ஒன்
    X
    ஒன்பிளஸ் கான்செப்ட் ஒன்

    சி.இ.எஸ். 2020 விழாவில் அறிமுகமான ஒன்பிளஸ் கான்செப்ட் ஒன்

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய கான்செப்ட் ஒன் ஸ்மார்ட்போன் சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.



    ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் கான்செப்ட் போனனான ஒன்பிளஸ் கான்செப்ட் ஒன் 2020 சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. கலர்-ஷிஃப்டிங் கிளாஸ் தொழில்நுட்பம் கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக இது உருவாகி இருக்கிறது. அதாவது இந்த ஸ்மார்ட்போனின் பின்புற கேமராக்கள் பயன்படுத்தும் போது மட்டுமே தெரியும்.

    பயன்படுத்தாத போது ஸ்மார்ட்போனின் கேமரா சென்சார்கள் மறைந்தே இருக்கும். ஒன்பிளஸ் நிறுவனம் மெக்லாரெனுடன் மூன்றாவது முறையாக இணைந்து புதிய கான்செப்ட் போனினை வடிவமைத்து இருக்கிறது. 

    ஒன்பிளஸ் கான்செப்ட் ஒன்

    ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் கிளாஸ் கரிம பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கிளாஸ் கேமரா லென்ஸ்களை மறைத்து கொள்கிறது. மேலும் இவை கேமராவுக்கு மூன்று வித ஃபில்ட்டர்களை வழங்குகிறது. புதிய கான்செப்ட் போன் மெக்ராலென் 720எஸ் ஸ்பைடர் லக்சரி ஸ்போர்ட்ஸ் காரில் டாப் கிளாசில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை கொண்டிருக்கிறது.

    மெக்ராலென் ஸ்போர்ட்ஸ் காரில் எலெக்ட்ரோகுரோமிக் கிளாஸ் பேனல் பயன்படுத்தப்படுகிறது. இது காண்ணாடியினுள் புகும் வெளிச்சத்தை அனுமதிக்கவும், கட்டுப்படுத்தவும் செய்கிறது. 

    கான்செப்ட் ஒன் அதிகளவு சோதனை செய்யப்பட்டு, உறுதித்தன்மைக்கான சோதனையை பூர்த்தி செய்த பின்னரே விற்பனைக்கு வெளியிடப்படும் என ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×