search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    சாம்சங் கேலக்ஸி எம்10எஸ்
    X
    சாம்சங் கேலக்ஸி எம்10எஸ்

    இந்தியாவில் சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடி

    சாம்சங் நிறுவன ஸ்மார்ட்போன் மற்றும் சாதனங்களை வாங்குவோருக்கு சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.



    சாம்சங் நிறுவனம் சாம்சங் புளூ ஃபெஸ்ட் சேல் சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. ஆறு நாட்கள் நடைபெறும் சிறப்பு விற்பனை நவம்பர் 19 ஆம் தேதி நிறைவு பெற இருக்கிறது. சிறப்பு விற்பனையின் கீழ் சாம்சங் ஸ்மார்ட்போன் மற்றும் அக்சஸரீக்களின் விலை குறைக்கப்பட்டு இருக்கிறது. 

    அந்த வகையில் சாம்சங் கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது. கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 1000 குறைக்கப்பட்டு ரூ. 7,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று கேலக்ஸி நோட் 9  ஸ்மார்ட்போன் ரூ. 42,999 விலையிலும், கேலக்ஸி எஸ்9 ரூ. 29,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    சாம்சங் கேலக்ஸி நோட் 9

    விலை குறைப்பு தவிர தேர்வு செய்யப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்களை வாங்கும் ஹெச்.டி.எஃப்.சி. வாடிக்கையாளர்களுக்கு 10 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இத்துடன் சாம்சங் கேலக்ஸி எஸ்10 மற்றும் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன்களை வாங்குவோர் சாம்சங் அக்சஸரீக்களை சிறப்பு விலையில் வாங்கிட முடியும்.

    சிறப்பு விலை சாம்சங் வயர்லெஸ் சார்ஜர், கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ், ஸ்டிராப் காம்போக்கள், ஏ.கே.ஜி. வை500 ஹெட்செட், கேலக்ஸி ஃபிரெண்ட்ஸ் கவர், க்ளியர் வியூ கவர் மற்றும் கேலக்ஸி டேப் எஸ்5இ போன்ற சாதனங்களுக்கு பொருந்தும். சாம்சங் புளூ ஃபெஸட் சேல் சாம்சங் இந்தியா ஆன்லைன் ஸ்டோரில் மட்டும் நடைபெறுகிறது.

    இத்துடன் இரு ஸ்மார்ட்போன்களை வாங்கும் ஹெச்.டி.எஃப்.சி. வாடிக்கையாளர்களுக்கு 7.5 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. கேலக்ஸி வாட்ச் வாட்ச் 42 எம்.எம். மாடல் ரூ. 19,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
    Next Story
    ×