என் மலர்

  தொழில்நுட்பம்

  இருவித அளவுகளில் ஹெட்போன் ஜாக் மற்றும் பட்டன்களின்றி உருவாகும் கேலக்ஸி நோட் 10
  X

  இருவித அளவுகளில் ஹெட்போன் ஜாக் மற்றும் பட்டன்களின்றி உருவாகும் கேலக்ஸி நோட் 10

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.  சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போன் இதுவரை வெளியான மாடல்களை விட வித்தியாசமானதாக இருக்கும் என கூறப்படுகிறது.

  இந்நிலையில், தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களில் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனில் 3.5 எம்.எம். ஜாக் மற்றும் பட்டன்கள் நீக்கப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. மற்ற ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களில் சமீபகாலங்களில் நீக்கப்படும் பல்வேறு அம்சங்கள் இதுவரை வெளியான கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டு இருக்கின்றன.  ஸ்மார்ட்போன்களில் மெமரியை நீட்டிக்கும் வசதி அனைவரும் எதிர்பார்க்கும் ஒன்றாக இருக்கிறது. கேலக்ஸி நோட் 10 மாடலில் ஹெட்போன் ஜாக் நீக்கப்படுவது அந்நிறுவன வாடிக்கையாளர்களை பாதிக்கலாம். மற்றபடி ஸ்மார்ட்போனின் பட்டன்களை பொருத்தவரை பவர் பட்டன், வால்யூம் ராக்கர் மற்றும் பிரத்யேக பிக்ஸ்பி பட்டன் போன்றவை நீக்கப்படும் என தெரிகிறது.

  ஏற்கனவே பலமுறை கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அதன்படி கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் இருவித மாடல்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. இவை கேலக்ஸி நோட் 10 மற்றும் கேலக்ஸி நோட் 10 ப்ரோ என அழைக்கப்படும் என தெரிகிறது.

  இதன் ஸ்டான்டர்டு மாடலில் 6.28 இன்ச் டிஸ்ப்ளேவும், ப்ரோ மாடலில் 6.75 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய கேலக்ஸி நோட் 10 சீரிசின் முன்புற பேனல் முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கும் என்றும் இதன் ஒற்றை செல்ஃபி கேமரா பன்ச் ஹோல் முறையில் டிஸ்ப்ளேவின் மேல்புற மத்தியில் பொருத்தப்படும் என கூறப்படுகிறது.
  Next Story
  ×