என் மலர்

  தொழில்நுட்பம்

  நூற்றுக்கணக்கான எமோஜி, நைட் மோட் ஆப்ஷனுடன் அசத்தும் வாட்ஸ்அப் அப்டேட்
  X

  நூற்றுக்கணக்கான எமோஜி, நைட் மோட் ஆப்ஷனுடன் அசத்தும் வாட்ஸ்அப் அப்டேட்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வாட்ஸ்அப் செயலியில் புதிதாக நூற்றுக்கணக்கான எமோஜி மற்றும் நைட் மோட் வசதிகளை புதிய அப்டேட் மூலம் பெற இருக்கிறது.  வாட்ஸ்அப் புதிய ஆண்ட்ராய்டு பீட்டா தளத்தில் பல்வேறு புதிய எமோஜிக்கள் மற்றும் நைட் மோட் வழங்கப்பட இருப்பது பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருக்கிறது.

  வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.139 அப்டேட்டில் புதிய வடிவமைப்பு கொண்ட சுமார் 155 எமோஜிக்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய எமோஜிக்கள் அடுத்த கூகுள் பிளே ஸ்டேபில் அப்டேட்டில் வழங்கப்படலாம் என தெரிகிறது. முந்தைய அப்டேட்டில் டார்க் மோட் அம்சம் காணப்பட்ட நிலையில், தற்சமயம் இவை நைட் மோட் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


  புகைப்படம் நன்றி: WABetaInfo

  அந்த வகையில் எதிர்காலத்தில் வரும் ஆண்ட்ராய்டு பீட்டா அப்டேட்டில் நைட் மோட் அம்சம் வழங்கப்படலாம். வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.139 பதிப்பில் 155 எமோஜிக்கள் புதிய வடிவமைப்பு பெற்றிருக்கின்றன. இவை வாட்ஸ்அப் அடுத்த ஸ்டேபில் அப்டேட்டில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.139 பதிப்பில் நைட் மோட் வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதை உணர்த்தியிருக்கிறது. தற்சமயம் இந்த அம்சம் எனேபிள் செய்யப்படவில்லை என்ற போதும், அடுத்த பீட்டா அப்டேட்டில் வழங்கப்படலாம் என தெரிகிறது. புதிய அப்டேட் நீண்ட காலமாக சோதனை செய்யப்பட்ட டார்க் மோட் அம்சம் நைட் மோட் என பெயர் மாற்றம் பெறுவதை உறுதி செய்திருக்கிறது.
  Next Story
  ×