என் மலர்

  தொழில்நுட்பம்

  மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீடு - அவ்வளவு நேரம் ஆகாது சீக்கிரமே வெளியிடுவோம்
  X

  மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீடு - அவ்வளவு நேரம் ஆகாது சீக்கிரமே வெளியிடுவோம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீடு பற்றி அந்நிறுவனம் புதிய தகவல் வழங்கி இருக்கிறது. #Samsung  சாம்சங் நிறுவனம் தனது மடிக்கக்கூடிய கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனின் வெளியீடு பற்றி புதிய தகவலை வழங்கி இருக்கிறது. முன்னதாக கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனில் கோளாறு ஏற்பட்டதாக விமர்சகர்கள் தகவல் தெரிவித்த நிலையில், இதன் வெளியீடு அமெரிக்காவில் தள்ளிவைக்கப்பட்டது.

  அந்த வகையில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீடு பற்றி இறுதி முடிவெடுக்கும் கட்டத்தில் சாம்சங் இருப்பதாக அந்நிறுவனம் தற்சமயம் தெரிவித்திருக்கிறது. இதனால் கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் எதிர்பார்க்கப்பட்டதை விட சீக்கிரமே வெளியாகும் என தெரிகிறது.

  “கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனில் ஏற்பட்ட கோளாறுக்கான காரணம் கண்டறியப்பட்டு விட்டது. இதனை சரி செய்வது பற்றி ஓரிரு நாட்களில் முடிவு எட்டப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் வெளியாக அதிக காலம் ஆகாது.” என சாம்சங் மொபைல் பிரிவு தலைவர் டி.ஜே. கோ தெரிவித்தார்.   கேலக்ஸி ஃபோல்டு வெளியீடு பற்றி டி.ஜே. கோ சரியான தேதியை இதுவரை அறிவிக்கவில்லை என்றபோதும், அவர் வழங்கியிருக்கும் தகவல் சாம்சங்கின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாகும் என்பதை உணர்த்துவதாக அமைந்து இருக்கிறது. சாம்சங் தனது கேல்கஸி ஃபோல்டு வெளியீட்டு தேதியை அறிவிக்கும் போது டிஸ்ப்ளே பிரச்சனையை எப்படி சரி செய்தது பற்றி விவரங்களை வழங்கும் என தெரிகிறது. 

  முன்னதாக கேல்கஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை முன்பதிவு செய்தவர்களுக்கு வெளியீடு பற்றிய தகவல் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்கப்படும் என சாம்சங் தெரிவித்திருந்தது. தற்சமயம் டி.ஜே. கோ வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி ஃபோல்டு  வெளியீட்டு தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
  Next Story
  ×