என் மலர்

  தொழில்நுட்பம்

  ரூ.9,099 செலுத்தினால் கேலக்ஸி எஸ்10 வாங்கலாம் - ஏர்டெல் அறிவிப்பு
  X

  ரூ.9,099 செலுத்தினால் கேலக்ஸி எஸ்10 வாங்கலாம் - ஏர்டெல் அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி எஸ்10 மற்றும் கேலக்ஸி எஸ்10 பிளஸ் ஸ்மார்ட்போன்களை வாங்க ஏர்டெல் எளிய மாத தவணை முறை வசதியை அறிவித்துள்ளது. #GalaxyS10 #Airtel  சாம்சங் நிறுவனத்தின் 2019 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களான கேலக்ஸி எஸ்10 மற்றும் கேலக்ஸி எஸ்10 பிளஸ் இந்திய விலை அறிவிக்கப்பட்டு முன்பதிவும் துவங்கியிருக்கிறது.  

  இந்நிலையில், ஏர்டெல் நிறுவனம் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களை வாங்க வாடிக்கையாளர்களுக்கு எளிய மாத தவணை சலுகையை அறிவித்துள்ளது. கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனின் 128 ஜி.பி. மற்றும் 512 ஜி.பி. வேரியண்ட், கேலக்ஸி எஸ்10 பிளஸ் 128 ஜி.பி. வேரியண்ட் ஏர்டெல் தளத்தில் மாத தவணையில் வாங்கிட முடியும்.

  ஏர்டெல் சலுகையில் கேலக்ஸி எஸ்10 128 ஜி.பி. வேரியண்ட் வாங்க ரூ.9,099, 512 ஜி.பி. வேரியண்ட் வாங்க ரூ.13,809 மற்றும் கேலக்ஸி எஸ்10 பிளஸ் மாடலுக்கு ரூ.15,799 முன்பணமாக செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

  முன்பணம் செலுத்தி இந்த ஸ்மார்ட்போன்களை வாங்குவோர் 128 ஜி.பி. மாடலுக்கு மாதம் ரூ.2,999 தொகையை 24 மாதங்களுக்கும், 512 ஜி.பி. மாடலுக்கு ரூ.3,499 24 மாதங்களுக்கு தவணையாக செலுத்த வேண்டும்.   அந்த வகையில் முன்பணம் மற்றும் தவணை தொகையை சேர்க்கும் போது கேலக்ஸி எஸ்10 128 ஜி.பி. வேரியண்ட் விலை ரூ.81,075, கேலக்ஸி எஸ்10 512 ஜி.பி. விலை ரூ.97,785 மற்றும் கேலக்ஸி எஸ்10 பிளஸ் 128 ஜி.பி. விலை ரூ.87,775 செலுத்துவர். 

  புதிய ஸ்மார்ட்போன்களை முன்பதிவு செய்வோருக்கு கேலக்ஸி பட்ஸ் சாதனத்தை ரூ.2999 எனும் சிறப்பு விலையிலும், கேலக்ஸி வாட்ச் சாதனத்தை ரூ.9,999 விலையில் வாங்கிட முடியும். இந்த சலுகையை பெற சாதனம் மார்ச் 6 முதல் மார்ச் 31 ஆம் தேதிக்குள் ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

  கேலக்ஸி எஸ்10 அல்லது கேலக்ஸி எஸ்10 பிளஸ் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது ரூ.6000 மற்றும் கேலக்ஸி எஸ்10இ வாங்குவோருக்கு ரூ.4000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இத்துடன் நிபந்தனைகளக்கு உட்பட்டு எளிய மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. மேலும் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ் செய்யும் போது ரூ.15,000 வரை தள்ளுபடி பெறலாம்.

  கேலக்ஸி எஸ்10 மற்றும் கேலக்ஸி எஸ்10 பிளஸ் முன்பதிவு பிப்ரவரி 22 ஆம் தேதி துவங்கி மார்ச் 5 ஆம் தேதி வரை நடைபெறும் என சாம்சங் அறிவித்துள்ளது. இவற்றின் விநியோகம் மார்ச் 6 ஆம் தேதி துவங்குகிறது.
  Next Story
  ×