என் மலர்

  தொழில்நுட்பம்

  நான்கு கேமரா கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்
  X

  நான்கு கேமரா கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நான்கு கேமரா கொண்ட கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. #GalaxyA9  சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்தது. புதிய மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் முன்னதாக மலேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போன் மாடலில் சாம்சங் நிறுவனம் நான்கு பிரைமரி கேமரா சென்சார்களை வழங்கி இருக்கிறது.

  இதில் 24 எம்.பி சென்சார்,  f/1.7, 10 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.4, 8 எம்.பி. அல்ட்ரா வைடு லென்ஸ் மற்றும் 5 எம்.பி கேமரா டெப்த் விவரங்களை படம்பிடிக்க ஏதுவாக வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 24 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0 அப்ரேச்சர் கொண்டுள்ளது.

  6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 3800 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.  சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018) சிறப்பம்சங்கள்:

  - 6.3 இன்ச் 1080x2220 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே
  - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 710 10nm பிராசஸர்
  - அட்ரினோ 616 GPU
  - 6 ஜி.பி. / 8 ஜி.பி. ரேம்
  - 128 ஜி.பி. மெமரி
  - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  - ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
  - டூயல் சிம் ஸ்லாட்
  - 24 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.7 aperture
  - 10 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.4
  - 8 எம்.பி. அல்ட்ரா வைடு லென்ஸ் கேமரா
  - 5 எம்.பி டெப்த் கேமரா
  - 24 எம்.பி. செல்ஃபி கேமரா f/2.0
  - கைரேகை சென்சார்
  - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
  - 3800 எம்.ஏ.ஹெச். பேட்டரி
  - அடாப்டிவ் ஃபாஸ்ட் சார்ஜிங்

  சாம்சங் கேலக்ஸி ஏ9 (2018) ஸ்மார்ட்போன் கேவியர் பிளாக், லெமனேட் புளு மற்றும் பபுள்கம் பின்க் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் கேலக்ஸி ஏ9 (2018) 6 ஜி.பி. ரேம் வேரியன்ட் விலை ரூ.36,990 என்றும், 8 ஜி.பி. ரேம் வேரியன்ட் விலை ரூ.39,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

  இந்தியாவில் புதிய கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போன் சாம்சங் ஆன்லைன் தளம், ஏர்டெல், பே.டி.எம். மால், பிளிப்கார்ட், அமேசான் போன்ற வலைதளங்கள் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (நவம்பர் 20) முதல் முன்பதிவு செய்யப்படும் கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போனின் விற்பனை நவம்பர் 28ம் தேதி துவங்குகிறது.  அறிமுக சலுகைகள்:

  சாம்சங் கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போனினை வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பணம் செலுத்தினால் ரூ.3000 வரை கேஷ்பேக் பெற முடியும்.

  ஏர்டெல் ஆன்லைன் தளங்களில் கேலக்ஸி ஏ9 (6 ஜி.பி. வேரியன்ட்) ஸ்மார்ட்போனினை ரூ.3,690 முன்பணம் செலுத்தி மாதம் ரூ.2,349 மாத தவணை முறையில் வாங்கிட முடியும். இதேபோன்று கேலக்ஸி ஏ9 (8 ஜி.பி. வேரியன்ட்) ஸ்மார்ட்போனினை ரூ.4,890 முன்பணம் செலுத்தி, ரூ.2,449 மாத தவணை வசதியுடன் பெற முடியும். 

  மாத தவணையுடன் ஏர்டெல் போஸ்ட்பெயிட் சலுகையும் வழங்கப்படுகிறது. இதனுடன் டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தேசிய ரோமிங், ஏர்டெல் டி.வி. ஆப் இலவச சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
  Next Story
  ×