என் மலர்
தொழில்நுட்பம்

2018 ஐபோன்களில் ஆப்பிள் பென்சில் வசதி, 512 ஜிபி மெமரி
ஆப்பிள் நிறுவனம் 2018-ம் ஆண்டில் வெளியிட இருக்கும் ஐபோன் மாடல்களில் ஆப்பிள் பென்சில் சப்போர்ட் மற்றும் அதிகபட்சம் 512 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. #Apple #iPhone
ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு மூன்று ஐபோன்களை 6.1 இன்ச், 6.5 இன்ச் ஐபோன் X பிளஸ் மற்றும் 5.8 இன்ச் ஐபோன் என மூன்று அளவுகளில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றில் 6.1 இன்ச் மாடலின் விலை 550 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்படலாம் என்றும், 6.1 இன்ச் எல்.சி.டி. மாடலின் விலை 699 முதல் 749 டாலர்கள் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஐபோன்களின் விற்பனை குறைந்ததாலேயே இந்த ஆண்டு மாடல்களின் விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சீன நிறுவனங்களால் ஏற்பட்டுள்ள கடுமையான போட்டி காரணமாக குறைந்த விலை நிர்ணயம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் மூன்று ஐபோன்களிலும் ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்டலாம் என்றும் பட்ஜெட் விலை ஐபோன் மாடல் அதிகம் உற்பத்தி செய்யப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் 5.8 இன்ச் மாடலின் விலை 899 முதல் 949 டாலர்கள் என்றும், 6.5 இன்ச் மாடலின் துவக்க விலை 999 டாலர்கள் ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய ஐபோன் X விலை 999 டாலர்கள் முதல் துவங்குகிறது. 2018 OLED ஐபோன் மாடல்களில் 512 ஜிபி வேரியன்ட் மற்றும் ஆப்பிள் பென்சில் சப்போர்ட் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. தற்சமயம் உதிரி பாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடம் கட்டண குறைப்பு சார்ந்த பேச்சுவார்த்தைகளில் ஆப்பிள் நிறுவனம் ஈடுபட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
புகைப்படம் நன்றி - TrendForce
Next Story






