search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கூகுள் பிளே ஸ்டோர் செயலிகளில் விண்டோஸ் மால்வேர்

    கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள செயலிகளில் விண்டோஸ் இயங்கக்கூடிய மால்வேர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. #GooglePlayStore #Apps


    கூகுள் பிளே ஸ்டோர் செயலிகளில் புதிய மால்வேர் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து பாலோ ஆல்டோ நெட்வொர்க்ஸ் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் கூகுள் பிளே ஸ்டோரில் இருக்கும் 145 செயலிகளில் தீங்கிழைக்கும் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ்-இல் இயங்கக்கூடிய ஃபைல்களை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த பிரச்சனை கூகுளிடம் தெரிவிக்கப்பட்டதால், இவை பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு விட்டன. மால்வேர் தவிர, இந்த செயலிகள் ஆன்ட்ராய்டு மொபைல் இயங்குதளத்துக்கு தீங்கிழைக்காதவை தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீங்கிழைக்கக்கூடிய விண்டோஸ்-இல் இயங்கும் இந்த பைனரிக்கள், மற்ற தளங்களில் இயங்காது என்பதால், இவை ஆன்ட்ராய்டு தளத்தில் தீங்கிழைக்க முடியாது.

    இதுபோன்ற செயலிகளை டெவலப்பர்கள் மால்வேர் நிறைந்த விண்டோஸ் சிஸ்டம்களில் உருவாக்குவதாலேயே இதுபோன்ற பிரச்சனைகள் எழுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே டெவலப்பர்கள் கூகுள் பிளே ஸ்டோரில் பாதிக்கப்பட்ட செயலிகள் மற்றும் பாதிப்பு இல்லாத செயலிகள் என இரண்டையும் வழங்குகின்றனர்.

    இதுகுறித்து வெளியாகியிருக்கும் அறிக்கையில், பாதிக்கப்பட்ட செயலிகள் அக்டோபர் 2017 முதல் நவம்பர் 2017 வரையிலான காலக்கட்டத்தில் வெளியிடப்பட்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவை பிளே ஸ்டோரில் ஆறு மாதங்களுக்கும் மேல் இருந்திருக்கின்றன. பாதிக்கப்பட்ட செயலிகளில் சிலவற்றை சுமார் 1000-க்கும் அதிகமானோர் டவுன்லோடு செய்து இருக்கின்றனர்.

    பாதிக்கப்பட்ட செயலிகளில், ஒரு ஏ.பி.கே. ஃபைலில் அதிகளவு தீங்கிழைக்கும் பி.இ. ஃபைல்கள் வெவ்வேறு லொகேஷன்களில், வெவ்வேறு பெயர்களில் இருக்கும். முக்கியமான இரண்டு பி.இ. ஃபைல்கள் பாதிக்கப்பட்ட அனைத்து செயலிகளிலும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே குறிப்பிடப்பட்டதை போன்று இந்த செயலிகளால் நேரடியாக ஆன்ட்ராய்டு ஹோஸ்ட்களில் இயங்க முடியாது, எனினும் ஏ.பி.கே. ஃபைல் அன்பேக் செய்யப்பட்டால் இவை பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தலாம். #GooglePlayStore #Apps
    Next Story
    ×