search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    அசத்தல் அறிமுக சலுகைகளுடன் விற்பனைக்கு வரும் ஹானர் ஸ்மார்ட்போன்
    X

    அசத்தல் அறிமுக சலுகைகளுடன் விற்பனைக்கு வரும் ஹானர் ஸ்மார்ட்போன்

    ஹானர் இந்தியா கடந்த வாரம் அறிமுகம் செய்த புதிய ஸ்மார்ட்போனின் விற்பனை இன்று நடைபெறுகிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் ஹானர் 7சி மற்றும் 7ஏ ஸ்மார்ட்போன்கள் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டன. பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் இரண்டு மொபைல் போன்களும் முறையே அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் வலைத்தளங்களில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    அந்த வகையில் ஹானர் 7ஏ ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் மே 29-ம் தேதி விற்பனை செய்யப்பட்ட நிலையில், ஹானர் 7சி ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் இன்று (மே 31) மதியம் 12.00 மணிக்கு துவங்குகிறது. இரண்டு வேரியன்ட்களில் விற்பனை செய்யப்பட இருக்கும் ஹானர் ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு அமேசான் தளத்தில் சிறப்பு அறிமுக சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.



    ஹானர் 7சி சிறப்பம்சங்கள்:

    - 5.99 இன்ச் 1440x720 பிக்சல் 18:9 ஃபுல் வியூ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட்
    - அட்ரினோ 506 GPU
    - 3 ஜிபி / 4 ஜிபி ரேம்
    - 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ சார்ந்த EMUI 8.0
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2 
    - 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
    - 8 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3000 எம்ஏஹெச் பேட்டரி



    ஹானர் 7சி விசேஷ அம்சங்கள்:

    ஹூவாய் ஹானர் பிரான்டு தனது 7சி ஸ்மார்ட்போன் மாடலில் ஹூவாய் ஹிஸ்டன் 3D சவுன்ட் எஃபெக்ட்களை வழங்குகிறது. இத்துடன் புதிய ரைட் மோட் சாம்சங்கின் பைக் மோட் போன்று வேலை செய்கிறது. இத்துடன் பார்ட்டி மோட் இடம்பெற்றிருக்கிறது. இது ஒரே சமயத்தில் பல்வேறு மொபைல்களை ஒற்றை அவுட்புட் மூலம் இணைக்க வழி செய்கிறது.

    ஹானர் 7சி ஸ்மார்ட்போன் பிளாக், கோல்டு மற்றும் நீல நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ஹானர் 7சி ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட மாடல் விலை ரூ.11,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இந்தியாவில் ஹானர் 7சி ஸ்மார்ட்போன் வாங்கும் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,200 வரை கேஷ்பேக் மற்றும் 100 ஜிபி வரை கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் வட்டியில்லா மாத தவனை முறை வசதியும் வழங்கப்படுகிறது.
    Next Story
    ×