search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    சில தினங்களில் அறிமுகமாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்

    இந்தியாவில் மே 21-ம் தேதி சாம்சங் நிறுவனம் சார்பில் நடத்தப்பட இருக்கும் விழாவில் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    புதுடெல்லி:

    சாம்சங் நிறுவனம் சார்பில் மே 21-ம் தேதி மும்பையில் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவில் சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி ஜெ மற்றும் கேலக்ஸி ஏ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கேலக்ஸி ஜெ6 ஸ்மார்ட்போன் மே 22-ம் தேதி முதல் விற்பனை செய்ப்பட இறுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சாம்சங் இந்தியா அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கேலக்ஸி ஜெ6 ஸ்மார்ட்போனின் விற்பனை மே 22-ம் தேதி துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும் வீடியோவில் புதிய ஸ்மார்ட்போன் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது. 

    இதுவரை கேலக்ஸி நோட் 8, சாம்சங் கேலக்ஸி எஸ்9 உள்ளிட்ட மாடல்களில் பெசல்-லெஸ் டிஸ்ப்ளே வடிவமைப்பு வழங்கப்பட்ட நிலையில், தற்சமயம் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களிலும் சாம்சங் இந்த வடிவமப்பை வழங்க இருக்கிறது. கேலக்ஸி ஜெ6 ஸ்மார்ட்போனில் 5.6 இன்ச் ஹெச்டி பிளஸ் 720x1480 பிக்சல் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, ஆக்டாகோர் எக்சைனோஸ் 7870 பிராசஸர், 2 ஜிபி, 3 ஜிபி மற்றும் 4 ஜிபி ரேம் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. 



    இத்துடன் 32 ஜிபி மற்றும் 64 ஜிபி மெமரி ஆப்ஷன்களும், 13 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா, 3000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படலாம். இத்துடன் டூயல் சிம் சப்போர்ட், எஸ் பைக் மோட், அல்ட்ரா டேட்டா சேவிங் அம்சம் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்னும் சில தினங்களில் நடைபெற இருக்கும் விழாவில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஜெ6 ஸ்மார்ட்போனுடன் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போனினையும் வெளியிடுமா என்பது குறித்து எழ்வித தகவலும் இல்லை. எனினும் இவ்விழாவில் கேலக்ஸி ஏ6, கேலக்ஸி ஏ6 பிளஸ், மற்றும் கேலக்ஸி ஜெ4 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களையும் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    எதுவாயினும் புதிய கேலக்ஸி ஸ்மார்ட்போன்களின் விலை ரூ.15,000-இல் துவங்கி ரூ.20,000-க்குள் நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
    Next Story
    ×