search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    இலவச டேட்டா வழங்கும் ஏர்டெல் வோல்ட்இ பீட்டா
    X

    இலவச டேட்டா வழங்கும் ஏர்டெல் வோல்ட்இ பீட்டா

    ஏர்டெல் வோல்ட்இ பீட்டா திட்டம் தேர்வு செய்யப்பட்ட இந்திய மாநிலங்களில் பயனர்களுக்கு சோதனை செய்ய வழி வகுப்பதோடு, இலவச டேட்டாவும் வழங்குகிறது.
    புதுடெல்லி:

    இந்தியாவின் தேர்வு செய்யப்பட்ட மாநிலங்களில் வோல்ட்இ பீட்டா திட்டத்தை ஏர்டெல் அறிமுகம் செய்திருக்கிறது. புதிய திட்டத்தில் வாடிக்கையாளர்கள் ஏர்டெல் வோல்ட்இ தொழில்நுட்பத்தை சோதனை செய்ய முடியும் என்பதோடு, இலவச டேட்டாவும் கிடைக்கிறது.

    இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் 30 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இவை வோல்ட்இ ஸ்விட்ச் எனேபிள் செய்து டவுன்லோடு செய்ய 10 ஜிபி டேட்டா, 4-வது வாரத்தில் பரிந்துரை வழங்க 10 ஜிபி டேட்டா மற்றும் 8-வது வாரத்தில் இறுதி பரிந்துரைகளை வழங்க 10 ஜிபி டேட்டா என மூன்று கட்டங்களில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம். 

    ஏர்டெல் பீட்டா டெஸ்டிங் செய்வோர் அவ்வப்போது சீரற்ற நெட்வொர்க் அனுபவிக்க நேரிடும் என்றும், அடிக்கடி பரிந்துரை வழங்க வேண்டும் என ஏர்டெல் தெரிவித்திருக்கிறது. முதற்கட்டமாக ஏர்டெல் வோல்ட்இ பீட்டா டெஸ்டிங்கில் மேற்கு வங்கம், ஒடிசா, அசாம், கேரளா, பீகார், பஞ்சாப் மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் பங்கேற்க முடியும்.



    பீட்டா டெஸ்டிங் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள் வோல்ட்இ வசதி கொண்ட ஸ்மார்ட்போன், ஏர்டெல் 4ஜி சிம் கார்டு, மேம்படுத்தப்பட்ட ஓஎஸ் மென்பொருள் மற்றும் வோல்ட்இ ஸ்விட்ச் எனேபிள் செய்திருக்க வேண்டும். குறிப்பிடப்பட்ட மாநிலங்களில் உள்ள பயனர்கள், தங்களது மொபைல் நம்பரை பதிவு செய்து பீட்டா டெஸ்டிங் செய்ய முடியுமா என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

    ஏர்டெல் வோல்ட்இ தொழில்நுட்பம் ஹெச்.டி. வாய்ஸ் காலிங், இன்ஸ்டன்ட் கால் கனெக்ட் (மற்ற அழைப்புகளை விட மும்மடங்கு வேகம்), மல்டி டாஸ்கிங் உள்ளிட்ட வசதிகளை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஏர்டெல் வோல்ட்இ கொல்கத்தாவில் வழங்கப்பட்ட நிலையில், மும்பை, மகாராஷ்ட்ரா, கோவா, மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், குஜராத், ஆந்திர பிரதேசம், தெலுங்கானா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் முழுவதும் வோல்ட்இ தொழில்நுட்பத்திலான 4ஜி சேவையை வழங்கும் நிலையில், வோடபோன் நிறுவனம் மும்பை, குஜராத், டெல்லி, கர்நாடகா மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட மாநிலங்களில் வோல்ட்இ சேவையை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.
    Next Story
    ×