என் மலர்
தொழில்நுட்பம்

ஸ்மார்ட்போன் விற்பனையில் சாம்சங்-ஐ முந்திய சியோமி
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி இந்திய ஸ்மார்ட்போன் விற்பனையில் சாம்சங் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்து இருக்கிறது.
மும்பை:
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங்-ஐ பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்து இருக்கிறது. அக்டோபர் 2017 முதல் டிசம்பர் 2017 வரையிலான காலக்கட்டத்தில் சியோமி முதலிடம் பிடித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சைபர் மீடியா ஆய்வு அறிக்கையின் ((CMR)) படி இந்தியாவில் மகாராஷ்ட்ரா மாநிலம் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு பெரிய சந்தை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சியோமி வளர்ச்சிக்கும் மகாராஷ்ட்ரா மாநிலம் முக்கிய பங்கு வகித்திருக்கிறது. மகாராஷ்ட்ரா மாநிலத்தில் மட்டும் 13.7% விற்பனையை சியோமி பதிவு செய்திருக்கிறது.
இந்த காலக்கட்டத்தில் மட்டும் சியோமி நிறுவனம் 31.2% ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்திருக்கிறது. சாம்சங் நிறுவனம் 15.3% ஸ்மார்ட்போன் விற்பனை செய்திருந்தது. மகாராஷ்ட்ரா மாநிலத்தில் சியோமி ரெட்மி நோட் 4 விற்பனை ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது.
அக்டோபர் மற்றும் நவம்பர் 2017-இல் சியோமி சார்பில் திறக்கப்பட்ட Mi ஹோம் விற்பனை மையங்களும் சியோமி விற்பனை அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றன. இந்த ஆண்டு ஜனவரி மாதம் மும்பையின் தானே பகுதியில் சியோமி Mi ஹோம் ஸ்டோர் திறக்கப்பட்டது.
சியோமி, சாம்சங் நிறுவனங்களை தொடர்ந்து விவோ, ஒப்போ மற்றும் லெனோவோ போன்ற நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்திருக்கின்றன. ஸ்மார்ட்போன் விற்பனையில் முதல் ஐந்து இடங்களை பிடித்திருக்கும் நிறுவனங்கள் மட்டும் நாட்டின் ஸ்மார்ட்போன் விற்பனையில் 84% பங்குகளை வைத்திருக்கின்றன.
சைபர் மீடியா ஆய்வு நிறுவனம் மட்டுமின்றி கனாலிஸ் மற்றும் கவுன்டர்பாயிண்ட் போன்ற நிறுவனங்களும் 2017-ம் ஆண்டின் நான்காவது காலாண்டு நிலவரப்படி இந்திய ஸ்மார்ட்போன் விற்பனையில் சியோமி முதலிடம் பிடித்திருப்பதாக அறிவித்திருந்தது.
Next Story






