என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்

34.5 பில்லியன் டாலர் கொடுத்து கூகுள் குரோம்-ஐ விலைக்கு வாங்க முன்வந்த Perplexity ஏ.ஐ. நிறுவனம்!
- இது Perplexity நிறுவனத்தின் மதிப்பை விட 2 மடங்கு அதிகம் ஆகும்.
- பல முதலீட்டாளர்கள் ஏற்கனவே ஒப்பந்தத்திற்கு முழு நிதி ஆதரவை வழங்க ஒப்புக்கொண்டுள்ளனர்.
உலகின் பிரபலமான தேடல் தலமான கூகுள் குரோமை வாங்க செயற்கை நுண்ணறிவு (AI) ஸ்டார்ட்அப் நிறுவனமான பெர்ப்ளெக்ஸிட்டி (Perplexity) முன்வந்துள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரவிந்த் ஸ்ரீனிவாஸ் தலைமையிலான Perplexity நிறுவனம், குரோமுக்கு 34.5 பில்லியன் டாலர் (தோராயமாக ரூ. 3.02 லட்சம் கோடி) சலுகையை வழங்கியுள்ளது.
இது Perplexity நிறுவனத்தின் மதிப்பை விட 2 மடங்கு அதிகம் ஆகும்.
அமெரிக்க அரசாங்கத்தின், நம்பகத்தன்மை இன்மை குற்றச்சாட்டுகளால் கூகிள் தற்போது கடுமையான அழுத்தத்தை எதிர்கொள்கிறது.
தேடுபொறி சந்தையில் ஏகபோகத்தைத் தடுக்க குரோமை விற்க வேண்டும் என்று அமெரிக்க நீதித்துறை பரிந்துரைத்து வரும் நேரத்தில், பெர்ப்ளெக்ஸிட்டி இந்த மிகப்பெரிய சலுகையை வழங்கி உள்ளது.
இந்த ஒப்பந்தத்திற்குத் தேவையான நிதி வெளிப்புற முதலீட்டாளர்கள் மூலம் திரட்டப்படும் என்று பெர்ப்ளெக்ஸிட்டி தலைமை வணிக அதிகாரி டிமிட்ரி ஷெவெலென்கோ தெரிவித்தார்.
ப்ளூம்பெர்க்கின் கூற்றுப்படி, பல முதலீட்டாளர்கள் ஏற்கனவே ஒப்பந்தத்திற்கு முழு நிதி ஆதரவை வழங்க ஒப்புக்கொண்டுள்ளனர்.
சலுகையை உறுதிப்படுத்திய பெர்ப்ளெக்ஸிட்டி, ஒப்பந்தம் வெற்றியடைந்தால் குரோமில் முக்கிய மாற்றங்கள் எதுவும் செய்யப்படாது என்று விளக்கம் அளித்தது.
பெர்ப்ளெக்ஸிட்டி தற்போது அதன் AI உடன் இயங்கும் 'காமெட்' (Comet) என்ற browser ஐ இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.






