search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    ஒன்பிளஸ் 12R மாடலுக்கு ரூ. 3,000 வரை தள்ளுபடி வழங்கும் ப்ளிப்கார்ட்
    X

    ஒன்பிளஸ் 12R மாடலுக்கு ரூ. 3,000 வரை தள்ளுபடி வழங்கும் ப்ளிப்கார்ட்

    • இதன் உண்மை விலை ரூ. 39 ஆயிரத்து 999 ஆகும்.
    • இதன் விலை ரூ. 3 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு இருக்கிறது.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் 12R ஸ்மார்ட்போனிற்கு ப்ளிப்க்ராட் வலைதளத்தில் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், ஒன்பிளஸ் 12R மாடலுக்கு தற்போது சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஒன்பிளஸ் சாதனங்களை ஆன்லைனில் அதிகாரப்பூர்வமாக விற்பனை செய்யும் தளமாக அமேசான் உள்ளது.

    இந்த நிலையில், ப்ளிப்கார்ட் வலைதளத்தில் ஒன்பிளஸ் 12R ஸ்மார்ட்போனின் 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 36 ஆயிரத்து 366 என குறிப்பிடப்பட்டு இருககிறது. இந்த ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ. 39 ஆயிரத்து 999 ஆகும். அந்த வகையில், இதன் விலை ரூ. 3 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு இருக்கிறது.


    அமேசான் தளத்தில் இந்த ஸ்மார்ட்போனின் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போனை வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரம் வரை கூடுதல் தள்ளுபடி பெற முடியும். இதனால், ஒன்பிளஸ் 12R விலை ரூ. 37 ஆயிரத்து 999 என மாறிவிடும்.

    அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் 12R மாடலில் 6.78 இன்ச் 120Hz AMOLED ஸ்கிரீன், குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், அதிகபட்சம் 16 ஜி.பி. ரேம், 50MP பிரைமரி கேமரா, 5500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஆக்சிஜன் ஓ.எஸ். 14 உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    குறிப்பு: ஸ்மார்ட்போனின் விலை எவ்வளவு நேரம் குறைக்கப்பட்டு இருக்கும் என்பது பற்றி எவ்வித தகவலும் இல்லை. ஸ்டாக் இருப்புக்கு ஏற்ப இதன் விலை எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படலாம்.

    Next Story
    ×