search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    குறைந்த விலை, பெரிய பேட்டரி.. வேற லெவலில் ரெடியாகும் ஐபோன் SE 4
    X

    குறைந்த விலை, பெரிய பேட்டரி.. வேற லெவலில் ரெடியாகும் ஐபோன் SE 4

    • ஐபோன் SE மாடல்கள் ஐபோன் 8 போன்ற சேசிஸ் கொண்டிருக்கிறது.
    • மொத்தம் ஐந்து மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் SE 4 மாடல் கடந்த 2022 ஆண்டு அறிமுகமான ஐபோன் SE மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது ஆப்பிள் நிறுவனத்தின் குறைந்தவிலை ஐபோன் மாடல் எனும் பெருமையை பெறும் என்று தெரிகிறது. முந்தைய ஐபோன் SE மாடல்கள் ஐபோன் 8 போன்ற சேசிஸ் கொண்டிருக்கிறது.

    எனினும், புதிய நான்காம் தலைமுறை ஐபோன் SE மாடலில் முற்றிலும் புதிய டிசைன் வழங்கப்படும் என்று தெரிகிறது. இத்துடன் ஐபோன் SE 4 மாடலின் பேட்டரி அதன் முந்தைய வெர்ஷன்களில் வழங்கப்பட்டு இருப்பதை விட அளவில் பெரிதாக இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த மாடல் ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டான்டர்டு ஐபோன் மாடல்களுக்கு இணையான பேட்டரி பேக்கப்-ஐ புதிய ஐபோன் SE 4 வழங்கும் என்று தெரிகிறது.


    இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் ஐபோன் SE 4 மாடலில் ஐபோன் 14-இல் வழங்கப்பட்ட பேட்டரி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு ஐபோன் SE (2022) மாடலுடன் ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ், ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் என மொத்தம் ஐந்து மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

    இதுவரை வெளியாகி இருக்கும் ப்ரோடோடைப் தகவல்களின் படி ஐபோன் SE 4 மாடலில் ஆப்பிள் நிறுவனத்தின் A2863 பேட்டரி வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஐபோன் 14 மாடலிலும் இதே பேட்டரி வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இது 3279 எம்.ஏ.ஹெச். திறன் கொண்டிருக்கிறது. ஆப்பிள் தனது ஐபோன்களின் பேட்டரி திறன் குறித்து இதுவரை எந்த தகவலும் வழங்கியதில்லை.

    Next Story
    ×