search icon
என் மலர்tooltip icon

    கணினி

    M3 சிப்செட் கொண்ட 15-இன்ச் மேக்புக் ஏர் - வெளியீடு எப்போ தெரியுமா?
    X

    M3 சிப்செட் கொண்ட 15-இன்ச் மேக்புக் ஏர் - வெளியீடு எப்போ தெரியுமா?

    • புதிதாக 15 இன்ச் மேக்புக் ஏர் மாடலை உருவாக்கி வருவதாக தகவல்.
    • M3 சிப்செட் கொண்டு இயங்கும் ஏராளமான சாதனங்களை அறிமுகம் செய்ய ஆப்பிள் முடிவு.

    ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டில் M2 சிப்செட் கொண்ட புதிய 15 இன்ச் மேக்புக் ஏர் மாடலை அறிமுகம் செய்தது. இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் M3 சிப்செட் கொண்ட 15 இன்ச் மேக்புக் ஏர் மாடலை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.

    இது குறித்து ஆப்பிள் வல்லுனரான மார்க் குர்மேன் வெளியிட்டு இருக்கும் தகவல்களில், ஆப்பிள் நிறுவனம் புதிதாக 15 இன்ச் மேக்புக் ஏர் மாடலை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. மேலும் புதிய மேக்புக் ஏர் மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால் எந்த மாதத்தில் அறிமுகம் செய்யப்படும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

    M3 சிப்செட் கொண்டு இயங்கும் ஏராளமான சாதனங்களை அறிமுகம் செய்ய ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி புதிய ஐமேக் மற்றும் 13 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல்களும் M3 சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்படலாம். இந்த மாடல்களை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது. புதிய ஐமேக் மாடல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படுகிறது.

    இதன் டிசைன் 2020 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. 2020 ஆண்டு அறிமுகம் செய்யபபட்ட ஐமேக் மாடலில் M1 சிப்செட் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது தான் ஆப்பிள் நிறுவனம் M2 சிப்செட் கொண்ட 15 இன்ச் மேக்புக் ஏர் மாடலை அறிமுகம் செய்து இருந்தது. இந்த மேக்புக் மாடல் இந்திய சந்தையிலும் கிடைக்கிறது.

    Next Story
    ×