search icon
என் மலர்tooltip icon

    கணினி

    ஆப்பிள் 15 இன்ச் மேக்புக் ஏர் வெளியீடு - இணையத்தில் லீக் ஆன தகவல்!
    X

    ஆப்பிள் 15 இன்ச் மேக்புக் ஏர் வெளியீடு - இணையத்தில் லீக் ஆன தகவல்!

    • ஆப்பிள் நிறுவனத்தின் புது மேக்புக் ஏர் வெளியீடு பற்றி இணையத்தில் தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
    • இதுதவிர புதிய ஏர்பாட்ஸ் மாடல் உருவாகி வருவதாகவும், இதன் விலை சற்று குறைவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவனம் தனது மேக்புக் ஏர் மாடல்களை மாற்றியமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இவற்றில் அளவில் சிறிய 12 இன்ச் மாடல் மற்றும் பெரிய 15 இன்ச் மாடலும் இடம்பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து மார்க் குர்மேன் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் 12 இன்ச் மாடல் இந்த ஆண்டு அறிமுகமாகாது என்றும் 15 இன்ச் மேக்புக் ஏர் மாடல் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்து இருக்கிறார்.

    புதிய 15 இன்ச் மேக்புக் ஏர் பற்றிய விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. எனினும், டிஸ்ப்ளே பிரிவு வல்லுனரான ராஸ் யங், ஆப்பிள் நிறுவனம் 15.5 இன்ச் டிஸ்ப்ளே பேனல்களை உருவாக்கும் பணிகளை இந்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் துவங்கி விடும் என ஏற்கனவே தெரிவித்து இருந்தார். இதற்கான தேதியில் மாற்றம் செய்யப்படவில்லை எனில், புது மேக்புக் ஏர் மாடல் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும்.

    சமீபத்தில் தான் மேக்புக் ஏர் மாடல் பெருமளவு அப்டேட் செய்யப்பட்டது என்ற காரணத்தால் ஆப்பிள் இம்முறை புது மேக்புக் ஏர் டிசைனை பெருமளவுக்கு மாற்றாது என்றே தெரிகிறது. அதன்படி புது மேக்புக் ஏர் டிசைன் அதன் தற்போதைய மாடல்களை போன்றே காட்சியளிக்கும். மற்ற அம்சங்களை பொருத்தவரை இதில் M2 சிப் அல்லது M2 ப்ரோ பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த இரு பிராசஸர்களையும் ஆப்பிள் இதுவரை அறிவிக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    விரைவில் புதிய M2 சிப்செட் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதோடு புதிய மேக் சாதனங்களில் இந்த சிப்செட் வழங்கப்பட இருக்கிறது. இந்த ஆண்டு அல்லது 2024 வாக்கில் ஆப்பிள் அறிமுகம் செய்யும் என கூறப்பட்ட 12 இன்ச் மேக்புக் ஏர் மாடல் தற்போதைக்கு விரைந்து அறிமுகம் செய்யப்படாது என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.

    Next Story
    ×