search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்தம்ப கணபதி"

    சிருங்கேரி ஆச்சார்ய பரம்பரையில் எல்லோருக்கும் பிரியமான மூர்த்தியாக இந்த ஸ்தம்ப கணபதி இருக்கிறார். நியாயமான வேண்டுதல்களை தட்டாமல் நிறைவேற்றியும் இருக்கிறார்.
    சிருங்கேரியில் ஆச்சார்யர் தங்கி இருக்கும் பிரதேசத்துக்கு நரசிம்ம வனம் என்று பேர். துங்கையின் ஒரு கரையில் சாரதாம்பா கோவில், இன்னொரு கரையில் நரசிம்ம வனம் உள்ளது. இரண்டு கரையையும் நரசிம்ம சேது என்று ஒரு பாலம் இணைக்கிறது. நரசிம்ம பாரதி சுவாமிகள் கால கட்டத்தில் பாலம் கிடையாது. அந்த கரைக்கு படகில் தான் போக வேண்டும். மழை காலங் களில் வெள்ளம் பெருகினால் அதுவும் முடியாது.

    ஒரு தடவை திடீரென்று சுவாமிகள் கோவிலுக்கு வந்ததால் அவரோடு பூஜையில் இருக்கும் உம்மாச்சியை கொண்டு வரவில்லை. இந்த கோவிலில் கணபதி விக்ரகம் கிடையாது. முதல் பூஜை கணபதிக்கு செய்யாமல் எப்படி பண்ண முடியும்? என்று யோசித்து விட்டு அங்கே இருந்த ஒரு கல்தூணுக்கு ஒரு குடம் தண்ணீர் அபிஷேகம் செய்ய சொன்னார். அந்த தூணுக்கு கணபதி உம்மாச்சியோட ஸ்லோகத்தை சொல்லிக்கொண்டே ஒரு மஞ்சள் துண்டால் கணபதி ரூபத்தை கோடு மாதிரி போட்டார்.

    முழு ரூபமும் போட்டு முடிச்சு சுவாமிகள் கையை எடுத்த உடனே மஞ்சள் பட்ட இடம் மட்டும் ஒரு இன்ச் புடைப்பு சிற்பம் மாதிரி வெளியில் வந்ததாம். உடனே சாங்கோபாங்கமாக உம்மாச்சி பூஜையை செய்து விட்டு அவரோட அப்பா, அம்மாவுக்கும் பூஜை பண்ணினாராம்.

    ஸ்தம்பம் என்றால் தூண் என்று அர்த்தம். ஸ்தம்பத்தில் இருந்து பிரசன்னமானதால் ஸ்தம்ப கணபதி என்று பெயர் ஏற்பட்டது. சிருங்கேரி ஆச்சார்ய பரம்பரையில் எல்லோருக்கும் பிரியமான மூர்த்தியாக இந்த ஸ்தம்ப கணபதி இருக்கிறார். நியாயமான வேண்டுதல்களை தட்டாமல் நிறைவேற்றியும் இருக்கிறார். சிருங்கேரியில் அவசியம் தரிசனம் செய்ய வேண்டிய ஒரு அற்புதமான மூர்த்தி இவராவார்.
    ×