search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஷாருக் ஷைபி"

    • பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தினர்.
    • கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த விசாரணை மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த ஏப்ரல் மாதம் 2-ந் தேதி ஆலப்புழா-கண்ணூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீவைக்கப்பட்டது. இதில் டெல்லியை சேர்ந்த ஷாருக் ஷைபி என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த சம்பவத்தில் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தினர். மேலும் ஷாருக் ஷைபியை காவலில் எடுத்து என்.ஐ.ஏ. விசாரணை மேற்கொண் டது.

    இந்நிலையில் நேற்று அதிகாலை அதே ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஒரு பெட்டிக்கு தீ வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கொல்கத்தாவை சேர்ந்த புஷன்ஜித் சித்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    கண்ணூரில் நேற்று நடந்த சம்பவத்திற்கும், ஏற்கனவே 3 பயணிகள் தீவைத்து எரித்து கொல்லப்பட்ட சம்பவத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என என்.ஐ.ஏ. அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள். எனவே அவர்கள் இந்த 2 சம்பவத்தையும் இணைத்து விசாரிக்க திட்டமிட்டு உள்ளனர்.

    இதற்காக கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ. அதிகாரிகள் சம்பவம் நடந்த பகுதிக்கு சென்று விசாரணை நடத்த உள்ளனர். மேலும் இதுதொடர்பான தகவல்களையும் சேகரிக்க உள்ளனர். சமீபத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் வட மாநிலங்களில் சந்தேகப்படும் நபர்கள் வீடுகள், அலுவலகங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த விசாரணை மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.

    இதற்காக 3 பயணிகள் எரித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் கைதான ஷாருக் ஷைபியின் காவல் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    ×