search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெங்காயம் திருட்டு"

    • வெங்காயம் சிதறிகிடந்த பாதை வழியாக சென்று அவை பதுக்கி வைத்திருந்த இடத்தை கண்டுபிடித்தனர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே பச்சமலையான்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட உத்தயாகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் முத்துராஜ். விவசாயி. இவரும் அதேபகுதியை சேர்ந்த ராமசாமி என்பவரும் தங்கள் தோட்டத்தில் வெங்காயம் பயிரிட்டிருந்தனர்.

    அறுவடை பணிகள் நிறைவடைந்து அடுத்த முறை பயன்படுத்தும் விதைக்காக வெங்காய மூட்டைகளை பட்டறைகளில் பாதுகாப்பாக வைத்திருந்தனர். நேற்று நள்ளிரவு பட்டறையில் வைக்கப்பட்டிருந்த வெங்காய தோட்டத்திற்கு அழகம்பட்டியை சேர்ந்த செல்வம், காமுபிள்ளை சத்திரத்தை சேர்ந்த பொன்ராம் ஆகியோர் பட்டறையில் இருந்த 50 கிலோ எடை கொண்ட 15 மூட்டை வெங்காயத்தை திருடி மற்றொருவர் தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்தனர்.

    நள்ளிரவில் மூட்டைகளை தூக்கிச்சென்றதால் அதிலிருந்து கீழே விழுந்த வெங்காயம் வழிநெடுக சென்று அவர்கள் பதுக்கிய இடத்தை காட்டி கொடுத்தது. இன்று காலை தோட்டத்திற்கு சென்று பார்த்த விவசாயிகள் வெங்காய மூட்டைகள் திருடுபோனது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் வெங்காயம் சிதறிகிடந்த பாதை வழியாக சென்று அவை பதுக்கி வைத்திருந்த இடத்தை கண்டுபிடித்தனர். அங்கிருந்த வெங்காயதிருடன் பொன்ராம் என்பவரை செம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அந்த இடத்தின் உரிமையாளர் செல்வம் என்பவர் தப்பி ஓடிவிட்டநிலையில் அங்கிருந்த வெங்காய மூட்டைகள் மற்றும் அவற்றை திருட பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை போலீசாரிடம் விவசாயிகள் ஒப்படைத்தனர்.

    இந்நிலையில் பிடிபட்ட பொன்ராம் என்பவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்ல சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன் அறிவுறுத்தினார். இதற்கு விவசாயிகள் மறுத்து அவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் போலீஸ் நிலையத்திலும் முற்றுகையிட்டனர். இதனைதொடர்ந்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×