search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகள் குமுறல்"

    • கூடுதல் விலைக்கு உரங்கள் விற்கப்படுவதாக விவசாயிகள் குமுறுகின்றனர்.
    • அரசின் உத்தரவுகள், அறிவுறுத்தல்களை மீறி தனியார் உரக்கடைகள் செயல்பட்டு வருகிறது.

    திருச்சுழி

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் ஓடைகள், கண் மாய்கள், குளம், குட்டை களில் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் விவசா யிகள் மகிழ்ச்சி அடைந்துள் ளனர்.

    திருச்சுழி, நரிக்குடி ஒன்றியங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. தற்போது சுமார் 450-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெல் பயிரிட்டுள்ள விவசா யிகள் உரமிடுவது, களை எடுப்பது போன்ற பணி களில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் பலர் நாற்று நடும் பணிகளையும் தொடங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் விவசாயி களுக்கு தேவையான உரங்கள் அனைத்தும் தட்டுபாடின்றி கிடைக்கும் வகையில் கூட்டுறவு மற்றும் தனியார் உரக்கடைகள் மூலமாக உரங்களை விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    இந்த நிலையில் நரிக்குடி, திருச்சுழி ஒன்றியங்களில் பெரும்பாலான கூட்டுறவு வங்கிகளில் அடங்கல் கொடுத்து உரங்களை வாங்க உள்ளதாகவும், அப்படி கொடுத்தும் உரங்கள் கிடைப்பது சிரமமாக உள்ளதாகவும் இதனால் உரம் வாங்க தனியார்கடைகளை நாடி செல்லும் நிலை ஏற்பட் டுள்ளதாகவும் விவசாயி கள் கூறுகின்றனர்.

    தனியார் உரக்கடைகள் யூரியா உரங்களை அதிக ளவில் இருப்பு வைத்துக் கொண்டு உரங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவது போன்ற ேதாற்றத்தை ஏற்படுத்தி அதிக விலைக்கு உரங்களை விற்கின்றனர். 45 கிலோ எடை கொண்ட யூரியா உர மூடைகள் ரூ.330 முதல் ரூ.350 வரை யிலும் சுமார் 50 கிலோ எடையுள்ள டி.ஏ.பி, பொட்டாஷ் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங் கள் ரூ.800 முதல் அதிக பட்சமாக ரூ.1600 வரை யிலும் விற்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    மேலும் இணை உரங்க ளையும் அதிக விலைக்கு கட்டாயப்படுத்தி விற்பனை செய்வதாகவும், இதனால் யூரியா உரம் வாங்கும் போது 5 மடங்கு அதிக விலை கொண்ட டி.ஏ.பி போன்ற இணை உரங்களையும் வாங்க வேண்டி உள்ளதாகவும் விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

    தனியார் உரக்கடைகளில் வாங்கும் உரங்களுக்கு ரசீதுகள் முறையாக வழங்கப்படுவதில்லை என வும், கைரேகை மற்றும் ஆதார் பதிவுகளை அதிக விலைக்கு உரங்கள் விற்பனை செய்யப்படு வதாகவும் சமூக ஆர்வ லர்கள் குற்றம்சாட்டு கின்றனர்.

    அரசின் உத்தரவுகள், அறிவுறுத்தல்களை மீறி தனியார் உரக்கடைகள் செயல்பட்டு வருவதாகவும், பறக்கும் படையினர் மேற்கொள்ளும் ஆய்வு பெயரளவிலேயே உள்ள தாகவும் அவர்கள் தெரி விக்கின்றனர்.

    இந்த நிலையில் தீவிர மாக ஆய்வுகள் மேற்கொண்டு விதிகளை மீறி செயல்படும் கடைகள் மீது கடுமையான நடவ டிக்கை எடுத்து விவசாயி களுக்கு தடையின்றியும், சரியான விலையிலும் உரங்கள் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×