search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விழிப்புணர்வு சுற்றுலா"

    • கலெக்டர் பரிசுகளை வழங்கி வழியனுப்பினார்
    • தேநீர், சுண்டல் மற்றும் குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டது

    வேலூர்:

    தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறையின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உலக சுற்றுலா தினம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று ஒரு நாள் சுற்றுலா பயணத்தை கோட்டையிலிருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    மேலும் மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி வழியனுப்பினார். தமிழ்நாடு சுற்றுலா துறையின் சார்பாக வேலூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் மூலம் செயல்பட்டு வரும் பள்ளி மற்றும் விடுதி மாணவர்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி மற்றும் விடுதி மாணவர்களுக்கு உலக சுற்றுலா தினம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது.

    மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மூலமாக 50 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு இன்று ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.

    மாணவர்கள் வேலூர் கோட்டை வளாகத்தில் இருந்து புறப்பட்டு வேலூரில் உள்ள மாவட்ட அறிவியல் மையம், வேலூர் கோட்டை, அரசு அருங்காட்சியகம், ஜலகண்டேஸ்வரர் கோவில் மற்றும் ஸ்ரீபுரம் தங்கக்கோவில் ஆகிய இடங்களுக்கு ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலாவாக சென்றனர்.

    சுற்றுலாவின் முக்கிய நோக்கமே பள்ளி மாணவ, மாணவிகளிடையே சுற்றுலா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாவிற்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு. காலை மாலை ஆகிய நேரங்களில் தேநீர், சுண்டல் மற்றும் குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் ராமச்சந்திரன், சுற்றுலாத்துறை அலுவலர் (பொ) இளமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு சுற்றுலா பயணம் சென்றனர்.
    • கலெக்டர் தொடங்கி வைத்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் உலக சுற்றுலா நாள் விழாவை முன்னிட்டு சுற்றுலாத்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்கள் ஒருநாள் விழிப்புணர்வு சுற்றுலா பயணம் மேற்கொண்டனர். இதனை கலெக்டர் ஆஷா அஜித் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசிய தாவது:-

    முதலமைச்சர் , பள்ளி மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருவது மட்டுமின்றி, அவர்களின் உடல் நலம் மற்றும் மனநலம் ஆகிய வைகளை சீராக வைத்துக் கொள்வ தற்கெனவும், பல்வேறு சிறப்பு நடவடிக் கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தி யுள்ளார். அந்தவகையில் சிவகங்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்பு ணர்வு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு சுற்றுலாவில், சிவகங்கை அருங்காட்சி யகம், கீழடி அருங்காட்சி யகம், அகரம், கொந்தகை அகழ்வாராய்ச்சி மையம், இது தவிர திருமலை மற்றும் இடைக்காட்டூர் தேவாலயம் ஆகிய இடங்களுக்கு மாணவ, மாணவியர்கள் அழைத்துச் செல்லப்படு கின்றனர். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பயனுள்ள வகையில் இந்த ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா மிகவும் சிறப்பாக அமைகின்ற வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள ப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுலா அலுவலர் சங்கர், அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் பக்கிரிசாமி உள்பட பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×