search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வினோத வழிபாடு"

    • கெங்கையம்மன் சிரசு (தலை) உடல் மீது பொருத்தப்படுவதை, சிரசு ஏற்றம் என்று அழைக்கப்படுகிறது.
    • தலை உடலுடன் சேரும்போது அம்மனுக்கு அதீத சக்தி மற்றும் உயிர் வரும் என முன்னோர் காலத்தில் இருந்து நம்பப்படுகிறது.

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த மராட்டியபாளையம் அருகே உள்ள ஏ.புதூர் சுப்புநாயுடு பாளையம் கிராமத்தில் கெங்கையம்மன் சிரசு திருவிழா நேற்று நடந்தது.

    காலை 10 மணி அளவில் சிரசு ஏற்றம் நிகழ்ச்சி நடந்தது. அப்போது கெங்கையம்மனுக்கு எருமைக்கிடா பலி கொடுக்கப்பட்டது.

    அதேபோல் எருமையின் முன்னங்கால்கள் வெட்டி கோவில் வாசப்படிகளிலும், பின்பகுதி கால்கள் வெட்டி கோவில் பின்புறத்திலும் வைக்கப்பட்டன.

    மேலும் வெட்டப்பட்ட எருமை கிடா தலையை கோவில் முன்பு வைத்து அதன் தலைமீது விளக்கேற்றி வைத்து, கிராம மக்கள் வினோத வழிபாடு செய்தனர்.

    இதை தொடர்ந்து கெங்கை அம்மனுக்கு ஆடு, கோழிகளை பலியிட்டு பக்தர்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.

    இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:-

    கெங்கையம்மன் சிரசு (தலை) உடல் மீது பொருத்தப்படுவதை, சிரசு ஏற்றம் என்று அழைக்கப்படுகிறது. அவ்வாறு தலை உடலுடன் சேரும்போது அம்மனுக்கு அதீத சக்தி மற்றும் உயிர் வரும் என முன்னோர் காலத்தில் இருந்து நம்பப்படுகிறது.

    மேலும் ஆக்ரோஷமான அம்மன் என்பதால், கெங்கை அம்மனின் கோபத்தை தணிக்க சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றது. கிராம மக்கள் நோய் நொடியின்றி செழிப்புடன் வாழ முதல் பலியாக எருமைக்கிடா பலி கொடுப்பது வழக்கம்.

    அதன்படி பலி கொடுக்கப்பட்ட எருமை கிடா உடல் பாகங்கள் கோவிலை சுற்றி வைக்கப்படுகிறது.

    மேலும் மழை பொழிய வேண்டி பலியிடப்பட்ட எருமைக்கடா தலை மீது விளக்கேற்றி வைத்தால் மழை பெய்யும் என்று நம்பப்படுகிறது.

    இதனை ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் கடைபிடித்து வருகிறோம் என்றனர்.

    • பூஜைகள் செய்த தேங்காய்களை உடைத்து வீரபத்திர சுவாமியை வழிபட்டனர்.
    • பத்துக்கு மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம், கடத்தூர் அருகே சில்லாரஅள்ளி கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குரும்பர் இன குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் குலதெய்வமான வீரபத்ரசாமி திருவிழா கொண்டாடும் வகையில் ஊர் தர்மகர்த்தா சேகர் தலைமையில் விழாநடைபெற்றது.

    சாமிக்கு அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடத்தி பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து காலை முதல் வீரபத்ர சுவாமி, பாரூர் அப்பன் சுவாமி, தொட்டில் அம்மன், வீரம்மாள் உள்ளிட்ட குல தெய்வங்களை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் தலையில் சுமந்து கொண்டு ஊர்வலமாக எடுத்து சென்றனர்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தலையின் மீது பூஜைகள் செய்த தேங்காய்களை உடைத்து வீரபத்திர சுவாமியை வழிபட்டனர்.

    மேலும் மேளதாளத்துடன் பக்தர்கள் நடனம் ஆடியவாறு தலையில் தேங்காய் உடைத்துநேர்த்திக்கடன் நிறைவேற்றினர். பத்துக்கு மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

    • திண்டுக்கல் அருகில் உள்ள ராஜக்காபட்டி அங்குநகரில் அடிக்கடி சாலை விபத்துகள் நடந்து வந்தன.
    • நள்ளிரவு ஆடு மற்றும் கோழிகளை பலியிட்டு அதன் ஈரல் மற்றும் சுருட்டு ஆகியவற்றை சாமிக்கு படையலிட்டு பூஜைகள் செய்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகில் உள்ள ராஜக்காபட்டி அங்குநகரில் அடிக்கடி சாலை விபத்துகள் நடந்து வந்தன. இதனால் உயிர்பலிகளும், உடல் உறுப்புகள் இழப்பும் ஏற்பட்டது. இதனை தடுக்க அப்பகுதி மக்கள் சாலையோரத்தில் ஜடாமுனீஸ்வரர் பீடம் எழுப்பி வழிபட்டு வந்தனர். தொடர்ந்து சாமிக்கு வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்ததால் விபத்துகள் குறைந்தது.

    இதனைதொடர்ந்து முனீஸ்வரருக்கு வருடந்தோறும் ஆடிப்பெருக்கு நாளில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்படி நேற்று நள்ளிரவு ஆடு மற்றும் கோழிகளை பலியிட்டு அதன் ஈரல் மற்றும் சுருட்டு ஆகியவற்றை சாமிக்கு படையலிட்டு பூஜைகள் செய்தனர்.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சாமிக்கு பலியிடப்பட்ட ஆடு, கோழிகளை வைத்து அசைவ உணவு தயாரிக்கப்பட்டு அதனை பக்தர்களுக்கு வழங்கினர். இந்த விருந்து விடியவிடிய பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

    திண்டுக்கல்லுக்கு ராஜக்காபட்டி முக்கிய சாலையாக இருந்து வந்தது. செட்டிநாயக்கன்பட்டி, முடக்குராஜக்காபட்டி, கள்ளிப்பட்டி உள்ளிட்ட சுற்றுப்பகுதியை சேர்ந்தவர்கள் இந்த சாலையை பிரதனமாக பயன்படுத்தி வந்தனர். திண்டுக்கல்-கரூர் சாலையில் மேம்பாலம் கட்டுமான பணிகள் தொடங்கியபிறகு இது தனித்தீவாக காட்சியளிக்கிறது.

    ×