search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபருக்கு தர்ம அடி"

    • சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த வாலிபர் சாலையோரம் நின்றிருந்த பைக்குகளை நைசாக சாவி போட்டு திறந்து அதை திருடி மறைவான இடத்தில் பதுக்கினார்.
    • பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

    வடமதுரை:

    அய்யலூர் அருகே கடவூர் பிரிவு சாலையில் ஒரு வாலிபர் சந்தேகத்தி ற்கிடமாக சுற்றித்திரிந்தார். சாலையோரம் நின்றிருந்த பைக்குகளை நைசாக சாவி போட்டு திறந்து அதை திருடி மறைவான இடத்தில் பதுக்கினார்.

    இதேபோல் 5க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை திருடியதை கண்காணிப்பு காமிரா பதிவு மூலம் பார்த்த பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

    மேலும் இது குறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து வாலிபரை பொதுமக்களிடம் இருந்து மீட்டனர். பொது மக்கள் தாக்கியதில் வாலிபர் படுகாயம் அடைந்தார். இதனால் அவரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விசாரணையில் அந்த வாலிபர் திருச்சி மாவட்டம் எலமனம் பகுதியை சேர்ந்த கதிரேசன் என தெரிய வந்தது. மேலும் அவருடன் வந்த 2 வாலி பர்கள் தப்பி ஓடிவிட்டனர். அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பைக்குகள் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இது குறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில், வடமதுரை, அய்யலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பைக் உள்ளிட்ட வாகனங்கள் அதிக அளவு திருடு போகிறது. வெளி யூர்களில் இருந்து வரும் நபர்கள் கைவரிசை காட்டி வருகின்றனர்.

    எனவே போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மது வாங்கிதரச்சொல்லி தகராறில் ஈடுபட்டதால் வாலிபருக்கு தர்மஅடி விழுந்தது.
    • இதுகுறித்து சின்னமனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    சின்னமனூர் அருகில் உள்ள எரசக்கநாயக்கனூர் பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமர் (வயது 38).

    இவர் சம்பவத்தன்று வேலைக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் (23) என்பவர் தனக்கு மதுபானம் வாங்கித் தருமாறு கேட்டார்.

    இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ராமர் குடிபோதையில் இருந்த ரமேஷை தாக்கினார். தடுக்க வந்த சுப்பம்மாள், மலர்மணி ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து சின்னமனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ×