சின்னமனூர் அருகே மது கேட்ட வாலிபருக்கு தர்ம அடி

மது வாங்கிதரச்சொல்லி தகராறில் ஈடுபட்டதால் வாலிபருக்கு தர்மஅடி விழுந்தது.இதுகுறித்து சின்னமனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

தேனி:

சின்னமனூர் அருகில் உள்ள எரசக்கநாயக்கனூர் பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமர் (வயது 38).

இவர் சம்பவத்தன்று வேலைக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் (23) என்பவர் தனக்கு மதுபானம் வாங்கித் தருமாறு கேட்டார்.

இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ராமர் குடிபோதையில் இருந்த ரமேஷை தாக்கினார். தடுக்க வந்த சுப்பம்மாள், மலர்மணி ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து சின்னமனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com