search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகன ஓட்டிகள் தவிப்பு"

    • பக்கவாட்டு சுவர்கள் மண் அரிப்பு ஏற்பட்டு தொப்பூர்-பொம்மிடி சாலையின் ஒரு பகுதி உடைந்து சரிந்து தண்ணீரில் மூழ்கியது.
    • மாற்று சாலைக்கான ஏற்பாடுகள் ஏதும் செய்யாமல் பிரதான சாலையும் அணையின் தண்ணீர் வற்றிய பிறகும் சாலை சீரமைக்கப்படவில்லை.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உள்ள தொப்பையாறு அணை 50 அடி உயரம் கொண்டது. தொப்பூரிலிருந்து பொம்மிடி பகுதிக்கு தொப்பையாறு அணையை ஒட்டி தார்சாலை செல்கிறது.

    இந்த சாலையில் பேருந்துகள் கனரக வாகனங்கள் பள்ளி கல்லூரி வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் தினமும் அதிக அளவில் பயணிக்கும் அளவிற்கு பிரதான சாலையாக இருந்து வருகிறது.

    இந்நிலையில் தொப்பையாறு அணைக்கு தொடர்ச்சியாக நீர்வரத்து இருந்ததாலும் அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பியதாலும் அணையின் தண்ணீர் சாலையின் இருபுறமும் தேங்கி நின்றது.

    இதனால் அணையை ஒட்டி உள்ள சாலையின் பக்கவாட்டு சுவர்கள் மண் அரிப்பு ஏற்பட்டு தொப்பூர்-பொம்மிடி சாலையின் ஒரு பகுதி உடைந்து சரிந்து தண்ணீரில் மூழ்கியது.

    சாலையின் மற்ற பகுதிகள் எந்த நேரத்திலும் தண்ணீரும் மூழ்கும் அபாயம் ஏற்பட்டதால் பேருந்து போக்குவரத்து கனரக வாகனங்களின் போக்குவரத்து என அனைத்தும் முழுமையாக தடை செய்யப்பட்டது.

    மேலும் இப்பகுதியில் பிரதான முக்கியமான சாலையாக இச்சாலை இருப்பதால் கடந்த இரண்டு மாதங்களாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களும் 1 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று மறுபக்கத்தில் உள்ள பேருந்துக்கு தினமும் மாறி மாறி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும் மற்ற ஊர்களுக்கு செல்லும் பொதுமக்களும் மிகவும் சிரமத்துக் குள்ளாகியுள்ளனர். மாற்று சாலைக்கான ஏற்பாடுகள் ஏதும் செய்யாமல் பிரதான சாலையும் அணையின் தண்ணீர் வற்றிய பிறகும் சாலை சீரமைக்கப்படாமல் இருப்பதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பள்ளி கல்லூரி மாணவர்களும் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். இதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளனர்.

    • தாடிக்கொம்பு நிறுத்தம் சாலைகளில் இருபுறங்களிலும் சிக்கன் கடை, பாஸ்ட்புட் கடை, ஹோட்டல் போன்றவற்றை வைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.
    • ஆக்கிரமிப்பு செய்துவரும் கடைகளை அப்புறப்படுத்தி போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத நிலையை ஏற்படுத்தி தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தாடிக்கொம்பு:

    தாடிக்கொம்பு பாலத்தின் இரு புறங்களிலும் தாடிக்கொம்பில் இருந்து வேடசந்தூர் செல்லும் சாலை, தாடிக்கொம்பிலிருந்து திண்டுக்கல் செல்லும் சாலை ஆகிய இரு புறங்களிலும் ஆக்கிரமிப்பு கடைகள் உள்ளன.

    இதனால் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவமாணவிகள், அலுவலகங்களுக்கு செல்பவர்கள்மிகவும் சிரமப்படுகின்றனர்.

    சாலைகளில் இருபுறங்களிலும் சிக்கன் கடை, பாஸ்ட்புட் கடை, ஹோட்டல் போன்றவற்றைவைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.

    இதுகுறித்து அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கலெக்டர் அலுவலகம், எஸ்.பி அலுவலகம், நீதிமன்றம் என பல்வேறு முக்கிய அலுவலகங்களுக்கு அத்தியாவசிய பணிகளுக்காக வருபவர்கள் அடிக்கடி சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் தாடிக்கொம்பு பெருமாள் கோவிலில் முக்கிய பூஜைகள் நடைபெறும் நாட்களில் பக்தர்களும் நெரிசலில் சிக்கி மாட்டி கொள்கின்றனர்.

    எனவே தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்துவரும் கடைகளை அப்புறப்படுத்தி போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத நிலையை ஏற்படுத்தி தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×