என் மலர்
நீங்கள் தேடியது "வளைகோல் பந்து"
- மாணவ-மாணவிகளுக்கு வளைகோல் பந்து பயிற்சி நாளை தொடங்குகிறது.
- மேலும் விபரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண் 04562-252947 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
விருதுநகர்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் விளையாட்டு இந்தியா திட்ட நிதியுதவியில் தொடக்க நிலை வளை கோல்பந்து பயிற்சிக்கான எஸ்.டி.எ.டி. விளையாட்டு இந்தியா மாவட்ட மையம் மாவட்ட விளையாட்டரங்கம் விருதுநகரில் செயல்பட உள்ளது.
இந்த மையத்தில் 30 முதல் 100 விளையாட்டு வீரர்- வீராங்கனைகள் வரை சேர்க்கப்பட்டு அவர்களுக்கு தினசரி காலை மற்றும் மாலையில் பயிற்றுநரால் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.
இந்த திட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ- மாணவிகள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.இத்திட்டத்தில் சேருவதற்கான மாவட்ட தேர்வு போட்டிகள் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு விருதுநகர் மாவட்ட விளையாட்ட ரங்கில் நடக்கிறது.
தேர்வு போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு பயணப்படி, தினப்படி வழங்கப்பட மாட்டாது. அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் இந்த திட்டத்தின் கீழ் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.
மேலும் விபரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண் 04562-252947 என்ற எண்ணில் அலுவலக நேரத்தில் தொடர்பு கொண்டு விபரங்களை பெற்று கொள்ளலாம்.
இந்த தகவலை கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்து உள்ளார்.






