search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வருவாய் ஆய்வாளர் கைது"

    • வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்
    • லஞ்சம் வாங்கியதற்காக

    அரியலூர்:

    திருமானூர் அருகில் ஏலாக்குறிச்சியில் அரியலூர் அருகே, பட்டா மாற்ற விவசாயிடம் ஒரு லட்சம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்தனர்.

    அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், செங்கராயன்கட்டளை கிராமத்தை சேர்ந்வர் சச்சிதானந்தம், 1974 ம் வருடம் பட்டாவாக இருந்த இவரது நிலம் தவறுதலாக தரிசு நிலமாக மாறிவிட்டது. பட்டாவாக இருந்ததற்கு உரிய பத்திரங்களை வைத்து, மீண்டும் பட்டா நிலமாக மாற்றித்தர மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார். மாவட்ட கலெக்டரும் பட்டா நிலமாக மாற்றுவதற்கு உத்தரவு கொடுத்துள்ளார்.

    இந்நிலையில், அந்த நிலத்தை பட்டாவாக மாற்றித் தரக்கோரி, ஏலாக்குறிச்சி, வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலரிடம் கேட்ட போது, அதற்கு அவர்கள் சச்சிதானந்த்த்திடம் ஒரு லட்சம் கேட்டுள்ளனர்.

    பணம் கொடுக்க மணம் இல்லாத, சச்சிதானந்நம் அரியலூர் லஞ்ச ஒழிப்பு துறையை தொடர்பு கொண்டு புகார் கொடுத்தார். லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளின் உத்தரவின் பேரில், சச்சிதானந்தம் முன்பணமாக இருபதாயிரம் ரூபாயை வருவாய் ஆய்வாளரிடம் கொடுத்துள்ளார். அப்போது மறைந்து இருந்த அரியலூர் லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி சந்திரசேகர் தலைமையிலான போலீசார், பட்டா மாற்ற லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார், கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தராஜ் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கைதுநடவடிக்கையால் அப்பகுதிலில் பெறும் பரபரப்பு ஏற்பட்டது

    ×