search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வட கொரிய பயணம்"

    அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ இந்த வாரம் வட கொரியாவுக்கு பயணம் மேற்கொள்ள இருந்ததை டிரம்ப் ரத்து செய்தது குறித்து தகவல் வெளியாகியுள்ளன. #DonaldTrump #NorthKorea
    வாஷிங்டன்:

    அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ இந்த வாரம் வட கொரியாவுக்கு பயணம் மேற்கொள்ள இருந்தார். இந்த பயணத்தின் போது அவர் வட கொரிய மூத்த அதிகாரிகளை சந்திப்பார் என்றும், சிங்கப்பூர் உச்சி மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிடம், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட உழைக்கப்போவதாக உறுதி அளித்து செய்துகொண்ட ஒப்பந்தத்தை நிறைவேற்ற வலியுறுத்துவார் என்றும் தகவல்கள் வெளிவந்தன.ஆனால் இந்த பயணத்தை சற்றும் எதிர்பாராத வகையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ரத்து செய்துவிட்டார். ஆனால் அதன் பின்னணி என்ன என்பது வெளிவரவில்லை.



    ஏற்கனவே மைக் பாம்பியோவுடன் பேச்சுவார்த்தை நடத்திய வடகொரிய ஆளும் கட்சியின் துணைத்தலைவர் கிம் யாங் சோல், அமெரிக்காவுக்கு கடந்த வெள்ளிக்கிழமையன்று ஒரு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பது தெளிவாக தெரியவரவில்லை என்றாலும், அந்த கடிதத்தில் எழுதி இருந்த விஷயங்கள்தான் டிரம்பையும், மைக் பாம்பியோவையும் வட கொரிய பயணத்தை ரத்து செய்ய வைத்து உள்ளது என ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகை கூறுகிறது. மைக் பாம்பியோவின் பயணத்தை ரத்து செய்தது குறித்து டிரம்ப் அறிவித்தபோது, ஜூன் 12-ந் தேதி சிங்கப்பூர் உச்சி மாநாட்டைத் தொடர்ந்து, வடகொரியா அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட தான் மேற்கொண்ட முயற்சியில் முடக்கம் ஏற்பட்டு உள்ளது என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டது நினைவுகூரத்தக்கது. வட கொரிய அரசு ஊடகம், அமெரிக்கா இரட்டை வேடம் போடுவதாக கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சாடி உள்ளது.  #DonaldTrump #NorthKorea
    ×