search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லிசா"

    நடிகர்கள் அஞ்சலி, சாம் ஜோன்ஸ், யோகி பாபு நடிப்பில் ராஜூ விஸ்வநாத் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் ‘லிசா’ படத்தின் விமர்சனம்.
    சிறுவயதிலேயே அப்பாவை இழந்த நாயகி அஞ்சலி விதவை தாயுடன் வளர்கிறாள். இளம் பெண்ணான அஞ்சலி தனது தாய்க்கு மறுமணம் செய்து வைக்க வேண்டும் என்பது விருப்பம். ஆனால் மறுப்பு தெரிவிக்கும் அம்மா, காதல் திருமணம் செய்து கொண்டதால், தனது அம்மா, அப்பாவின் தொடர்பு இல்லாமல் போய்விட்டதாகக் கூறுகிறார். 

    இதையடுத்து தாத்தா, பாட்டியை தேடி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள அவர்களது வீட்டிற்கு செல்கிறார் அஞ்சலி. கூடவே தனது கல்லூரி ஜூனியர் சாம் ஜோன்சையும் அழைத்து செல்கிறார். அங்கு ஒரு வயதான தம்பதி வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை தனது தாத்தா, பாட்டி என நினைத்துக் கொள்கிறார் அஞ்சலி.



    அந்த வயதான தம்பதியின் நடவடிக்கைகள் அஞ்சலிக்கு சந்தேகத்தை வரவைக்கிறது. அந்த வீட்டில் ஒரு பேயும் இருக்கிறது. ஒரு நாள் அந்த பேய் அஞ்சலி முன் வந்து பயமுறுத்துகிறது. ஆனால் எதற்கும் அஞ்சாத அஞ்சலி, அந்த பேய் குறித்து அறிய நினைக்கிறார். மேலும் வயதான தம்பதியின் பின் உள்ள மர்மத்தை கண்டுபிடிக்க பார்க்கிறார். இறுதியில் அந்த பேய் என்பதை அஞ்சலி கண்டுபிடித்தாரா? அஞ்சலியின் உண்மையான தாத்தா, பாட்டி என்ன ஆனார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை. 

    முதல் காட்சியில் இருந்து கடைசி காட்சி வரை அஞ்சலி தான் படத்தை தோளில் தாங்கியிருக்கிறார். அஞ்சலி ரசிகர்களுக்கு இந்த படம் பிடிக்கும். அஞ்சலி ஒல்லியான அழகு தேவதையாக ஜொலிக்கிறார். சாம் ஜோன்ஸ் அழகாகவும் இளமையாகவும் இருக்கிறார். பயப்படும் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்தால் ஒரு சுற்று வரலாம்.



    வில்லனாக மார்கரந்த் தேஷ்பாண்டே பயமுறுத்தி இருக்கிறார். பாட்டியாக வருபவரை பார்த்தாலும் பயமாக இருக்கிறது. யோகி பாபுவும், பிரம்மானந்தமும் சிரிக்க வைக்க முயன்று இருக்கிறார்கள்.

    அறிமுக இயக்குனர் ராஜூ விஸ்வநாத்தின் 3டி முயற்சிக்கு பெரிய பாராட்டு கொடுக்கலாம். முதல் பாதியில் எதிர்பார்ப்பு ஏற்படுத்தும் கதை இரண்டாம் பாதியில் ஏமாற்றத்தை தருகிறது. பிளாஷ்பேக் காட்சிகளில் அழுத்தம் இல்லாமல் இருக்கிறது. 3டி தொழில்நுட்பம் படத்திற்கு பெரும் பலமாக அமைந்திருக்கிறது.



    எதிர்பாராத வேளையில் வரும் டிவிஸ்ட் கொஞ்சம் ஆர்வத்தை கூட்டுகிறது. ஆனால், முடியப்போகும் நேரத்தில் மேலும் பிளாஷ் பேக் வருவது கொஞ்சம் வருத்தம் அளிக்கிறது. அழுத்தமான கதையும் சுவாரசியமான திரைக்கதையும் அமைத்து இருந்தால் குழந்தைகளையும் குடும்ப ரசிகர்களையும் இன்னும் ஈர்த்து இருக்கலாம்.

    பிஜி.முத்தையா ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் தரம். சந்தோஷ் தயாநிதி இசை ஓரளவிற்கு மிரட்டியிருக்கிறது.

    மொத்தத்தில் ‘லிசா’ மிரட்டல் குறைவு.
    லிசா படத்தில் நடித்துள்ள இளம் நடிகர் சாம் ஜோன்ஸ்-க்கு முன்னணி நடிகையாக இருக்கும் அஞ்சலி நடிப்பு பயிற்சி கொடுத்திருக்கிறார்.
    ஏமாலி படம் மூலம் அறிமுகமான சாம் ஜோன்ஸ், அந்த படத்தில் நன்றாக நடிக்க தெரிந்த இளம் நடிகர் என்று பெயர் எடுத்தார். அடுத்து தர்மபிரபு, லிசா 3டி படங்களில் நடித்துள்ளார். லிசாவில் அஞ்சலிக்கு ஜோடியாகவும், தர்மபிரபுவில் ஜனனிக்கு ஜோடியாகவும் நடிக்கிறார்.

    அஞ்சலியுடன் நடித்த அனுபவம் குறித்து அவர் கூறியதாவது:-

    லயோலா கல்லூரியில் பி.காம் படித்த எனக்கு சினிமா வாய்ப்பு வந்தது. முதல் படத்திலேயே பல தோற்றங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. இப்போது லிசாவில் பிரம்மானந்தத்துக்கு மகனாக நடித்துள்ளேன்.



    பெங்களூரில் இருந்து கொடைக்கானலுக்கு வரும் இளம் கல்லூரி ஜோடியாக நானும் அஞ்சலியும் வருகிறோம். அவர் எனக்கு நடிப்பில் சீனியர் என்பதால் நிறைய சொல்லிக்கொடுத்தார். நடிப்பதற்கு பயிற்சி கொடுத்தார்.

    தெலுங்கிலும் நானே குரல் கொடுத்துள்ளேன். தர்மபிரபுவில் எமலோகத்தில் யோகி பாபுவும் கீழ் உலகத்தில் நானும் கதாநாயகர்களாக இருப்போம். நான் சின்ன பையனாக இருப்பதால் இளம் கதாநாயகன் வாய்ப்புகள் வருகின்றன. அடுத்து 2 படங்கள் பேசி வருகிறேன். விஜய் சேதுபதி போல் அனைத்துவித கதாபாத்திரங்களிலும் நடிக்கவேண்டும். சிவகார்த்திகேயன் போல் ரசிகர்களுக்கு நல்ல எண்டர்டெய்னராகவும் விளங்கவேண்டும் என்பதே என் ஆசை’. இவ்வாறு அவர் கூறினார்.
    ராஜூ விஸ்வநாத் இயக்கத்தில் அஞ்சலி நடிப்பில் இந்தியாவின் முதல் ஸ்டெரோஸ்கோபிக் 3டி படமாக உருவாகி இருக்கும் ‘லிசா’ படத்தின் முன்னோட்டம்.
    பி.ஜி.மீடியா ஒர்க்ஸ் சார்பில் பி.ஜி.முத்தையா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘லிசா’.

    அஞ்சலி நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் சாம் ஜோன்ஸ், மக்ராந்த் தேஷ்பாண்டே, யோகி பாபு, மைம் கோபி முக்கிய கதபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இசை - சந்தோஷ் தயாநிதி, ஒளிப்பதிவு - பி.ஜி.முத்தையா, கலை - வினோத் ரவீந்திரன், சண்டைப்பயிற்சி - ஸ்டன்னர் சாம், பாடல்கள் - மணி அமுதவன், நடனம் - சுரேஷ், கிரியேட்டிவ் ஹெட் - யோகேஷ் கிருஷ்ணா, ஆடியோகிராபி - ஏ.எம்.ரஹமதுல்லா, தயாரிப்பு மேற்பார்வை - பாலமுருகன், இணை இயக்கம் - டி.என்.பி.ராஜேந்திரன், நிர்வாக தயாரிப்பு - சௌந்தர் பைரவி, தயாரிப்பு - பி.ஜி.முத்தையா, எம்.தீபா, எழுத்து, இயக்கம் - ராஜு விஸ்வநாத்.



    இந்த படம் 3டி டெக்னாலஜி ஸ்டீரியோஸ்கோப் என்ற அதிநவீன தொழில்நுட்பத்தில் தயாராகும் முதல் இந்திய திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. திகில் கலந்த த்ரில்லர் படமாக இது உருவாகி இருக்கிறது. படம் வருகிற மே 24-ந் தேதி திரைக்கு வருகிறது.

    லிசா படத்தின் டிரைலர்:

    சீயோன் இயக்கத்தில் கருணாகரன் - சந்தோஷ் பிரதாப் - அருண் ஆதித் - அனுசித்தாரா, சுபிக்‌ஷா, லிசா நடிப்பில் வெளியாகி இருக்கும் `பொது நலன் கருதி' படத்தின் விமர்சனம். #PodhuNalanKaruthi #PodhuNalanKaruthiReview #Karunakaran
    டாக்சி டிரைவராக இருக்கும் கருணாகரனின் அண்ணன் காணாமல் போகிறார். அவரைத் தேடிக்கொண்டே டாக்சி ஓட்டி வருகிறார் கருணாகரன். கந்துவட்டி கொடுக்கும் யோக் ஜேபி கும்பலிடம் அடியாளாக வேலை பார்ப்பவர் சந்தோஷ். மெக்கானிக்காக இருக்கும் அருண் ஆதித் தனது காதலி சுபிக்‌ஷாவுக்காக பைனான்ஸ் மூலம் வண்டி வாங்கி கொடுக்கிறார். 

    இந்த 3 பேரின் வாழ்க்கையும் கந்துவட்டியால் இணைகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது? அவர்களின் வாழ்க்கைப் பாதை எப்படி மாறுகிறது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    அண்ணனை தேடுவது, காதலியிடம் கெஞ்சுவது, கந்துவட்டி கும்பலின் பின்னணி தெரிந்ததும் தப்பி ஓடுவது என்று கருணாகரன் சிறப்பாக நடித்திருக்கிறார். 

    மிரட்டி வசூல் செய்யும் அடியாள் வேடத்தில் சந்தோஷ். ஒரு கட்டத்தில் நிதர்சனம் புரிந்து அவர் சாந்தமாவது, இறுதிக்காட்சியில் வஞ்சத்தால் வீழ்த்தப்படுதல் என அவருக்கும் இது முக்கியமான படம். யோக் ஜேபி வில்லனாக மிரட்டி இருக்கிறார். அருண் ஆதித் சாதாரண இளைஞனாகவும், காதல் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். இமான் அண்ணாச்சி ஒரு சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறார்.

    அனுசித்தாரா, சுபிக்‌ஷா, லிசா என 3 கதாநாயகிகள். மூவரில் சுபிக்‌ஷா கவனிக்க வைக்கிறார். அவரது கதாபாத்திரம் படத்தில் திருப்பத்தை ஏற்படுத்துகிறது.



    கந்துவட்டி என்று சாதாரணமாக சொல்லிவிடக்கூடிய வி‌ஷயத்தின் பின்னணியில் இருக்கும் தாதா கும்பல், போலீஸ் பின்னணி, அரசியல் ஆதரவு அனைத்தையும் திரில்லர் கதையாக கூறி இருக்கிறார் அறிமுக இயக்குனர் சீயோன். அன்றாடம் நடக்கும் பகீர் சம்பவங்களை கதையில் கோர்த்த விதத்தில் நம்பிக்கை இயக்குனராக தெரிகிறார்.

    5,000 பணம் வாங்க ஆசைப்பட்டு 50,000 வரை திருப்பி கொடுக்கும் ஏழை, நடுத்தர மக்களின் அன்றாட பிரச்சினையையும் கந்து வட்டி கொடுமைகளையும் கந்துவட்டி கும்பல்களால் சமூகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை பற்றியும் பேசியதற்காக இயக்குனருக்கு பாராட்டுகள். எனினும் திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். கந்துவட்டி பற்றி அனைவரும் ரசிக்க விதத்தில் திகில் படமாக கொடுத்த விதத்தில் பொது நலன் கருதி தலைப்புக்கு நியாயம் செய்து இருக்கிறது.

    ஹரி கணேஷ் இசை, சுவாமிநாதன் ஒளிப்பதிவு இரண்டும் கச்சிதம். கிரைசின் படத்தொகுப்பில் சில காட்சிகளை கத்தரித்து இருக்கலாம்.

    மொத்தத்தில் `பொது நலன் கருதி' பார்க்க வேண்டும். #PodhuNalanKaruthi #PodhuNalanKaruthiReview #Karunakaran #SanthoshPrathap #ArunAdith #AnuSithara #Subhiksha #Leesa #Zion

    சில படங்களில் நடித்து காணாமல் போன அஞ்சலி தற்போது ரீஎண்ட்ரி கொடுத்து பேய் படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காண்பித்து வருகிறார். #Anjali
    நடிகை அஞ்சலிக்கு இன்று 32 வது பிறந்தநாள். காணாமல் போனவர் மீண்டு வந்து தற்போது தனக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக பேய் படங்களில் அதிகமாக நடித்து வருகிறார். மை டியர் லிசா, 3டியில் உருவாகும் ஓ ஆகிய பேய் படங்களில் நடிக்கிறார். 

    சில படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார். இதுகுறித்து கேட்டபோது, சினிமாவில் ஒரு அங்கமாக எப்போதுமே இருக்க வேண்டும் என நினைக்கிறேன். நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்தால், அஞ்சலி நன்றாக நடித்திருக்கிறார் என மக்கள் மனதில் பதிவேன். 



    அந்தக் கதாபாத்திரங்களை ரசித்து நடிப்பேன். கமர்ஷியல் படங்களில் மக்களை மகிழ்விக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இரண்டு படங்களில் மட்டுமே ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறேன். அதில் எந்தத் தவறும் இல்லை என்று எனக்குத் தோன்றுகிறது’ என்றார்.
    ராஜூ விஸ்வநாத் இயக்கத்தில் அஞ்சலி நடிப்பில் உருவாகி வரும் ‘லிசா’ படப்பிடிப்பின் போது, தோசைக் கல்லை தூக்கி எறிந்து இயக்குநரின் நெற்றியை நடிகை அஞ்சலி பதம்பார்த்திருக்கிறார். #Lisaa #Anjali
    `காளி' ரிலீசுக்கு பிறகு அஞ்சலி நடிப்பில் `பேரன்பு', `நாடோடிகள்-2' உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றன. அஞ்சலி தற்போது ராஜூ விஸ்வநாத் இயக்கத்தில் ‘லிசா’ என்ற திகில் படத்தில் நடித்து வருகிறார். 

    பிரபல ஒளிப்பதிவாளரும், ‘மதுரை வீரன்’ படத்தின் இயக்குநருமான பி.ஜி.முத்தையா தயாரிக்கும் இந்த படம் 3டி டெக்னாலஜி ஸ்டீரியோ ஸ்கோப் என்ற அதிநவீன தொழில்நுட்பத்தில் தயாராகிறது. இந்த தொழில்நுட்பத்தில் தயாராகும் முதல் இந்திய திரைப்படம், இது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், சமீபத்தில் சண்டைக்காட்சி ஒன்றை படக்குழு காட்சிப்படுத்தியது. அந்த காட்சியில் அஞ்சலி, தோசைக்கல்லை கேமராவை நோக்கி வீச வேண்டும். ஆனால், அஞ்சலி வீசிய தோசைக்கல் நேராக இயக்குநர் ராஜூ விஸ்வநாத்தின் நெற்றியை தாக்கி ரத்தக் காயத்தை ஏற்படுத்தியது. இதில் அவரது கண் அருகே புருவம் கிழிந்து பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இயக்குநருக்கு நெற்றியில் தையல் போடப்பட்டது. 



    இதனால் அன்று ஒருநாள் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டது. ஏமாலி படத்தின் நாயகனான சாம் ஜோன்ஸ் இந்த படத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பாலிவுட் நடிகர் மக்ராந்த் தேஷ் பாண்டே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். #Anjali #Lisaa

    தமிழ் சினிமாவில் தனக்கு என ஒரு இடத்தை தக்க வைத்துள்ள அஞ்சலி சினிமாவில் மீண்டும் வேகம் எடுத்துள்ளதால், அடுத்தடுத்து பல படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். #Anjali
    அஞ்சலி கடைசியாக விஜய் ஆண்டனி ஜோடியாக `காளி' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த படத்தை தொடர்ந்து ராம் இயக்கத்தில் `பேரன்பு' மற்றும் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் ஜோடியாக `நாடோடிகள்-2' படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். இந்த இரு படங்களும் விரைவில் வெளியாக இருக்கின்றன. 

    இதுதவிர `காண்பது பொய்', 3டி-யில் உருவாகும் `லிசா' என்ற பேய் படத்திலும் தற்போது நடித்து வருகிறார். சமீபத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக ஒரு படத்திலும் நடிக்கத் தொடங்கினார். 



    இந்த நிலையில், தெலுங்கில் அஞ்சலி இரு வேடங்களில் நடித்து பெரிய வெற்றி பெற்ற கீதாஞ்சலி என்னும் பேய் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. இதிலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். 

    இதன்மூலம் `லிசா', `ஓ' மற்றும் `கீதாஞ்சலி-2' என ஒரே நேரத்தில் மூன்று பேய் படங்களில் அஞ்சலி நடித்து வருகிறார். #Anjali

    அஞ்சலி நடிப்பில் `காளி' படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #ANJALIasLISAA #Anjali
    சமீபத்தில் வெளியான `காளி' படத்தில் அஞ்சலியின் கதாபாத்திரத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், அஞ்சலி நடிப்பில் அடுத்ததாக `பேரன்பு' படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. 

    அஞ்சலி தற்போது `நாடோடிகள்-2' படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக விஜய் சேதுபதி ஜோடியாக பெயரிடப்படாத படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கும் நிலையில், அஞ்சலியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 



    அஞ்சலி அடுத்ததாக `லிசா' என்ற திகில் கலந்த த்ரில்லர் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தியாவின் முதல் ஸ்டெரோஸ்கோபிக் 3டி படமாக உருவாகும் இந்த படத்தை ராஜூ விஸ்வநாத் இயக்குகிறார். பி.ஜி.மீடியா ஒர்க்ஸ் சார்பில் `மதுரவீரன்' படத்தை இயக்கிய பி.ஜி.முத்தையா தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைக்கிறார். இவர் `மதுரவீரன்' படத்திற்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

    இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. #ANJALIasLISAA #Anjali #Lisaa

    ×